பக்கம்:உலகு உய்ய.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

வேறொன்றைப் பற்றியதாகும். அதாவது! - நான் ஏழு கணவரை மணந்தவள் - நான் எட்டு கணவரை மணந்த வள் - எனக்கா நீ புத்தி சொல்லுகிறாய்? - எனக்கா நீ கற்றுக்கொடுக்கிறாய்? என்று தாங்கள் கணவன்மார் பலரை மணந்ததைப் பற்றிப் பெருமையாய்ப் பேசுவது உண்டாம். இவர்களை நாகரிகப்படுத்த இந்திய அரசு ஆவன செய்து கொண்டுள்ளது.

மேற் கூறியதிலிருந்து தெரிவதாவது: அடிக்கடி மண விலக்கும் மறுமணமும் செய்து கொள்ளும் பழக்கம், அந்த மான்-நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவில், நாக ரிகம் அற்ற இனத்தவரிடையே நடைமுறையில் உள்ள பழக்கமாகும்-என்னும் செய்தி பெறப்படுகிறது. எனவே, வேறு வகையில் நாகரிகம் பெருகியுள்ளதாகக் காணப்படும் உலக நாடுகளில், அடிக்கடி மணவிலக்கும் மறுமணமும் செய்து கொள்வது, பண்பற்ற-சீர்திருந்தாத-நாகரிகம்அற்ற செயலாகவே கருதப்படும்; முன்னேறியுள்ள-வளர்ச்சிபெற் றுள்ள நாட்டு மக்கள் இதனை எண்ணிப் பார்க்கவேண்டும்.

கணவன் குறட்டை விடுகிறான்-அதனால் மணவிலக்கு வேண்டும். மனைவி நாகரிமாயில்லை-அதனால் மண விலக்கு வேண்டும். கணவன் குடிகாரன்-அதனால் மண விலக்கு வேண்டும். மனைவி நோயாளி - அதனால் மண விலக்கு வேண்டும்- என்பதாகப் பல செய்திகள் வெளி வருவதை நாளேடுகளில் படிக்கிறோம். இவ்வாறாக, உட்கார்ந்தால் மணவிலக்கு-எழுந்தால் மணவிலக்கு-எடுத் ததற்கெல்லாம் மணவிலக்கு என்ற முறை மக்களினத்தில் நீடித்துக் கொண்டிருக்குமாயின், குடும்ப வாழ்க்கை உருப் படுமா?-குடும்பவாழ்க்கை மனநிறைவு உடையதாக இருக் குமா? ஏன், குடும்பமே இல்லாமல் போய்விடுமே! ஆடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/203&oldid=544859" இலிருந்து மீள்விக்கப்பட்டது