பக்கம்:உலகு உய்ய.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

மாடுகளின் வாழ்க்கைக்கும் மக்களினத்தின் வாழ்க்கைக்கும் வேறுபாடு வேண்டாவா?

மணவிலக்கும் மறுமணமும் அடிக்கடி நிகழும் நாச் டிலே வாழ்ந்த கணவன் மனைவியர் இருவரும் பேசிச் கொண்டதான செய்தியொன்று இங்கே நினை வுக்கு வருகிறது. உண்மையை உணர்த்துவதற்காக வும்-அதே நேரத்தில்-நகைச் சுவைக்காகவும் இச்செய்தி இங்கே தரப்படுகிறது. வீட்டில் இருந்த மனைவி, வெளியி லிருந்து வீட்டுக்குத் திரும்பிய கணவனை நோக்கி, உன் பிள்ளையும் என் பிள்ளையும் சண்டை போட்டுக் கொண் டார்கள்-அந்தச் சண்டையை நம்முடைய பிள்ளை விலக்கி விட்டான்' என்று கூறினாளாம். உன் பிள்ளை' என்றது, அவன் வேறு மனைவியிடத்தில் பெற்ற பிள்ளையையாம். 'என் பிள்ளை' என்றது, அவள் வேறு கணவனிடத்தில் பெற்ற பிள்ளையையாம். நம் பிள்ளை' என்றது, இவர் கள் இருவருக்கும் பிறந்த பிள்ளையையாம். இவர்கள் இருவரும் இதற்குமுன் வேறுவேறானவரை மணந்துகொண் டிருந்தனர்-பின்னர் அவர்களினின்றும் மணவிலக்குப்பெற்று இவர்கள் இருவரும் மறுமணம் செய்துகொண்டார்கள் என்பது இதனால் தெரிகிறது. இங்கே முறையான ஓர் ஐயம் எழலாம். இருவரும் வேறு பிறரிடத்தில் பெற்ற இரண்டு பிள்ளைகளேவிட, பின்னர் இவர்கள் இருவரும் மறுமணம் செய்துகொண்டு பெற்றபிள்ளை சிறியவனாய் இருப்பானே-சிறியவன், தன்னிலும் பெரிய பிள்ளைகள் இருவரின் அடிதடி சண்டையை எவ்வாறு விலக்கிவிட முடியும்?-என்பதே அந்த ஐயம். சண்டையை விலக்கி விட்ட பிள்ளை, இவர்கள் இருவருக்கும் இப்போது பிறந்த பிள்ளை இல்லை-இவர்கள் இருவரும் முன்பு ஒரு முறை மணம் செய்து வாழாத வாழ்க்கை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/204&oldid=544860" இலிருந்து மீள்விக்கப்பட்டது