பக்கம்:உலகு உய்ய.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

நடத்தினர்.அப்போது பிறந்த பிள்ளை அவன்-எனவே, அவன், சண்டையிட்டுக் கொண்ட இருவரினும் மூத்தவனா வான்-அதனாலேயே சண்டையை விலக்க முடிந்தது. எனவே, பெற்றோர்கள் இருவரும், முதலில் ஒரு முறை மணம் செய்துகொண்டார்கள்-பின்னர் மணவிலக்குப் பெற்று வேறுவேறானவர்களை மறுமணம் செய்து கொண் டனர்-பின்னர் அவர்களிடமிருந்தும் மணவிலக்குப் பெற்று, மீண்டும் ஒரு முறை இருவரும் தமக்குள் மறுமணம் செய்து கொண்டனர்-என்பது பெறப்படும். இஃது என்னே வேடிக்கை! வேடிக்கையா? வெட்கம்-வெட்கம்!

ஒருவர் முறையின் கேடுகள்:

ஒருவர்க்கு ஒருவரே என்ற முறைக்கு மாறுபடுபவர் கள் அம்முறையினால் சில கேடுகள் உள்ளதாகக் கூறலாம். அவையாவன :- கணவன் குடிகாரனாகவும் சூதாடியாகவும் இருந்து உடைமைகளையெல்லாம் அழித்துக் குடும்பத் தைக் காப்பாற்ற முடியாதவனாயிருந்தால் அவனோடு எவ்வாறு வாழ்வது? மற்றும் திருடனாகவும் கொலை காரனாகவும் இருந்தால் அவனோடு எவ்வாறு வாழ முடியும்?

ஆண்மையில்லாத பேடியாயும் உடலுறவு கொண்டு இன்பம் அளிக்கும் ஆற்றல் இல்லாதவனாயும் இருந்தால் அவனோடு வாழ முடியுமா?

தீராத நோயாளியாய் இருந்தால் அவனுடன் வாழ் வது எப்படி? எனவே, மனைவி அவனிடத்தினின்றும் மண விலக்கு செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வாறே, மனைவி குடும்பப் பண்பு இல்லாதவளாயும் ஒழுக்கம் கெட்டவளாயும், மலடியாயும், நோயாளியாயும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/205&oldid=544861" இலிருந்து மீள்விக்கப்பட்டது