பக்கம்:உலகு உய்ய.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

இன்ன பிற குறைபாடு உடையவளாயும் இருப்பின், அவ ளோடு ஒருவன் எவ்வாறு வாழ்வது? மணவிலக்கைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு சிலர் வாதிடலாம்.இதற்குத் தீர்வு என்ன?-என்றும் கேட்கலாம்.

இதற்குத் தீர்வு காண இந்தியாவை நோக்கவேண்டும். கணவன் தகுதியற்றவனாய் இருப்பினும், இறுதி வரையும் அவனுடன் இணைந்து வாழ்வதே இந்தியப் பெண்களின் இலக்கண மாகும். இதனால் மனைவிக்குச் சிலஇழப்புகள் நேரலாம், ஆயினும், தாம் அடைய வேண்டிய சில நன்மை களைத் தியாகம் செய்தாயினும் குடும்பப் பெருமையைக் காப்பதே இந்தியப் பெண்களின் இயல்பு. எல்லாருக்கும் இவ்வாறு நேரப்போவதில்லை. எங்கோ ஒருசிலருக்கு இத் தகைய இழப்புகள் ஏற்படலாம். அவர்கள் தம் நலத்தைத் தியாகம் செய்கிறார்கள். நோயாளிக் கணவனை விட்டுப் பிரிந்தால் அவனைக் காப்பவர் யார்? எனவே கடமை உணர்வுடனும் தியாக மனப்பான்மையுடனும் செயலாற் றுவதே மக்கட் பண்பாகும். இதை ஏற்றுக் கொள்ளாத பெண்கள் சிலர் மண விலக்கும் மறு மணமும் செய்து கொள்ளலாம்.

இவ்வாறே, மனைவி மலடியாகவோ-நோயாளியா கவோ-திறமையற்றவளாகவோ இருப்பின், இந்தக் கார ணத்தைக் காட்டி மனைவியை மணவிலக்கு செய்வது இந் திய ஆடவரிடத்தில் இல்லை. ஆடவர்களும் தியாக உணர்வு டன் இறுதிவரை மனைவியை வைத்துக் காப்பாற்றி வரு கிறார்கள். மனைவி மலடியாயிருப்பின், கணவன் வேறு ஒருத்தியை மணந்து கொண்டு பிள்ளை பெறினும், முதல் மனைவியையும் கைவிடாமல் காப்பதே இந்திய நாட்டு வழக்கம். இத்தகைய தியாக உணர்வு இல்லாதார் சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/206&oldid=544862" இலிருந்து மீள்விக்கப்பட்டது