பக்கம்:உலகு உய்ய.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

ஆங்கிலம் உலக மொழியாக வேண்டுமெனில், இல சொற்களில் ஊமை (Silent) யாக உள்ள எழுத்துக்களை விலக்கி விடுவது நன்று. அல்லது, அந்த ஊமை எழுத்துக் களையும் இயன்ற வரையிலும் ஒலிக்க முயல்வது நல்லது. மற்றும் X என்னும் எழுத்து அவ்வளவாகத் தேவையா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்; இந்த எழுத் தின் வேலையை, வேறு எழுத்துக்களைக் கொண்டு முடித் துக் கொள்ள முடியாதா - என்பதையும் ஆராய்ந்து பார்க்கலாம். கட்டாயம் தேவையெனில் இருந்து போகட்டும்.

அடுத்து, Bazaar என்னும் சொல்லில் zaar என இரண்டு 'a' எழுத்துக்கள் உள்ளன அல்லவா? அவற்றில் ஒன்றை அமெரிக்கர்கள் விலக்கி Bazar என எழுதுகின்ற னர். Colour என்னும் சொல்லில் உள்ள U’ என்னும் எழுத்தை விலக்கி Color என அமெரிக்கர்கள் எழுதுகின் றனர். இவ்வாறு இன்னும் சீர்திருத்தப் பட்ட அமைப்பு ‘American English' stor வழங்கப்படுகிறது.

எனவே, இவ்வாறு தேவையில்லாத எழுத்துக்களை யெல்லாம் விலக்கி விடுவது நல்லது. இதனால், உலக மக்கள் குழப்பம் இன்றி எளிமையாக ஆங்கிலச் சொற் களை ஒலிக்க முடியுமன்றோ?

அடுத்து, ’ே, ‘.’ என்னும் எழுத்துக்கள் குழப்பம் தருவனவா யுள்ளன. ஜி', 'ஜே என இரண்டும் தனித்தனி எழுத்தாய் ஒலிக்கப்படும்போது ஒரே வகையான ஜகர' ஒலிப்பு உடையனவாயுள்ளன. இவற்றுள் ' என்பது, தான் வரும் எல்லாச் சொற்களிலுமே “ஜகர ஒலி பெற் றுள்ளது. எடுத்துக்காட்டு:- Jail=ஜெயில்; Tar=ஜார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/237&oldid=544893" இலிருந்து மீள்விக்கப்பட்டது