பக்கம்:உலகு உய்ய.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

2. ஏழமை நாடுகளின் தொழில் வளத்தைப் பெருக் கிப் பொருளாதாரத்தை உயர்த்த முயன்றது.

3. அடிமைத்தனம்-அபின் வாணிகம் முதலியவற்றைத் தொலைக்கப் பாடுபட்டது.

4. தொற்று நோய்கள் பரவாமல் இருக்கத் தடுப்பு முறைகள் செய்தது.

5. ஏழை நாடுகட்குப் பெருந் தொகையைக் கடனாக அளித்துதவியது.

6. போர்க் கைதிகள் தத்தம் நாடு அடையச் செய்

தது.

7. நிற வேற்றுமையை ஒழிக்க முனைந்தது-இன்னபிற.

இவ்வாறு பலவகை நன்மைகளைச் செய்துகொண்டி ருந்த கழகம் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமு மாக வளர்ந்ததா? அதுதான் இல்லை. கழகம் சிறகிழந்த பறவையாயிற்று-வேலியால் மேயப்பட்ட பயிராயிற்று. உறுப்பு நாடுகள் விதிகளை மீறிப் படைகளை மிகவும் பெருக்கின-கழகத்திலிருந்து ஒவ்வொன்றாகப் பிரியவும் தொடங்கின. மீண்டும் பெரும்போர். செர்மனியின் தலை வர் ஃஇட்லர் (Hitler) 1939 செப்டம்பர் முதல்நாள் போலந்தைத் தாக்கிப் போருக்குப் போணி பண்ணி, இரண்டாவது உலகப் பெரும் போருக்குத் திறப்பு விழா செய்தார். அணுகுண்டு வந்தே ஆண்டு நிறைவு விழா செய்தது. சப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரின்மேல் 1945 ஆகஸ்ட் 6 ஆம் நாளிலும், நாகசாகீ என்னும் நக ரில் 1945 ஆகஸ்ட் 9 ஆம் நாளிலும் அமெரிக்கா (U.S.A.) அணுகுண்டு போட்டது. சுமார் ஆறு ஆண்டு காலம் நடந்த போர், 1945 செப்டம்பர் 2ஆம் நாள் முடிவுக்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/265&oldid=544921" இலிருந்து மீள்விக்கப்பட்டது