பக்கம்:உலகு உய்ய.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265

இரண்டாவது உலக நிறுவனம்:

இரண்டாவது உலகப் பெரும் போரினால் ஏற்பட்ட இழப்புக்களை உணர்ந்த உலக அரசியல் தலைவர்கள், இனி இம்மாதிரி நிகழாதிருக்க, மீண்டும் ஓர் உலகநிறுவ னம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஐம்பது நாட்டுத் தலைவர்கள், 1945 சூன் 26 ஆம் நாள், அமெரிக்க நாட்டு "சான்பிரான்சிஸ்கோ நகரில் கூடி மாநாடு நடத்தினர். பல திட்டங்கள் தீட்டப்பட்டன. ஒன்றிய நாடுகளின் நிறு at suruh’(United Nations Organization)argir gyh@uuflówgPř அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைமைச் செயல கம் நியூயார்க்கில் (U.S.A.) உள்ளது. இதனை இப்போது தமிழில் சுருக்கமாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள்) என வழங்குகின்றனர். இதன் விதிமுறை 1945 அக்டோபர் 24 ஆம்நாள் நடைமுறைக்கு வாலாயிற்று. இதனால்தான் ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் நாளை ஐ.நா. நாளா கக் கொண்டாடும் வழக்கம் இப்போது இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலும் நாடுகள் சேர்ந்தன-இன்று வரையும் சேர்ந்துகொண்டும் உள்ளன. இந்நிறுவனத்தின் தலையாய உறுப்புக்கள்:- பொது மன்றம், பாதுகாப்பு மன்றம், அனைத்துலக நீதி மன்றம், பொருளாதார-சமூக மன்றம், இன்ன பிறவாம். மற்றும், இந்நிறுவனத்தின் இன்றியமையா நோக்கங்கள் சில வருமாறு:

1, இனி உலகின் எந்த மூலையிலும் போர் என்ற பேச்சே எழலாகாது.

2. ஒவ்வொரு மாந்தரின் மதிப்பும் உரிமையும் காப் பாற்றப்பட வேண்டும்.

3. மக்கள் சமுதாயம் துன்பம் காணாத இன்ப வாழ்க்கை வாழ்வதற்கு வேண்டிய வசதிகளை உண்டாக் கித் தரல்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/266&oldid=544922" இலிருந்து மீள்விக்கப்பட்டது