பக்கம்:உலகு உய்ய.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

4. மக்களிடையே தாங்கும் (சகிக்கும்) தன்மையும் பொறுமையும் நிலவச் செய்து நட்பு வளரச் செய்ய

வேண்டும்.

5. உலக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் கேடு நேரின், உலகினர் அனைவரும் ஒன்று பட்டுக் காக்க வேண்டும்.

இன்ன பிறவாம்.

இதன்படி ஐ.நா. நிறுவனம் பல ஆக்க வேலைகள் செய்தன..செய்து வருகின்றன. கொரியப் போர், ஈரான், எண்ணெய்த் தகராறு, காங்கோ சிக்கல், இன்ன பிறவற் றில் ஐ.நா.வின் ஈடுபாடு எத்தகையது என்பதை உல கறியும்.

யுனெஸ்கோ (UNESCO):

ஐ.நா. நிறுவனத்தின் ஒரு தலையாய உறுப்பாக, 'ஐக்கிய நாட்டுக் கல்வி-அறிவியல்-பண்பாட்டுக் கழகம்’ (UNESCO = United Nations Educational, Scientific and cultural Organization) GI Gārgğ)ılb @ri 9,65)uplīLy, 1946 நவம்பர் 4 ஆம் நாள் ஏற்படுத்தப் பெற்றது. இதன் தலை மைச் செயலகம் பாரிசில் உள்ளது. இது, உலகில் கல்வி, அறிவியல், பண்பாடு ஆகியவை வளரச் செய்கிறது; இதன் வாயிலாக, உலக நாடுகளில், கூட்டுறவு-அமைதி-பாதுகாப்பு இன்ன பிற ஓங்கியுயரச் செய்கிறது; மாந்தரின் அடிப் படை உரிமையைப் பேணச் செய்கிறது; இன்ன பிற ஆக் கப் பணிகளை யுனெஸ்கோ ஆற்றி வருகிறது.

பெருங் குறை;

ஐ.நா. நிறுவனம் எவ்வளவுதான் நல்ல ஆக்கப் பணி கள் புரியினும், உலக நாடுகளிடையே நிகழும் போர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/267&oldid=544923" இலிருந்து மீள்விக்கப்பட்டது