பக்கம்:உலகு உய்ய.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

யும். இல்லையேல், ஆயிரத்தெட்டு ஐ.நா. மன்றங்கள் இருப்பினும் சிறிதும் பயன் இல்லை.

ஐ.நா. மன்ற உறுப்பு நாடுகளுள் ஐந்து வல்லரசுகள் உள்ளன. அவை: அமெரிக்கா (U.S.A.), ரஷ்யா, பிரிட்டன், பிரான்சு, சீனா என்பனவாகும். இந்த ஐந்தும் ஒரு மனத் துடன் ஒத்துழைத்தால்தான் ஐ.நா. மன்றத்தில் எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட முடியும். ஒரு தீர்மானத் துக்குப் போதுமான பெரும்பான்மை இருப்பினும், இந்த ஐந்து வல்லரசுகளுள் ஒன்று மறுக்குமாயினும் தீர்மானம் நிறைவேறவியலாது. இந்த வல்லரசுகட்கு அத்தகைய விலக்கு உரிமை-வெட்டு உரிமை (Weto power) உண்டு. ஒரு தீர்மானம் கொண்டுவரப் பெறின், ஐந்து வல்லரசுகளுள் ஒன்றுக்கு அது பிடிக்காது போயின், சீட்டாட்டத்தில் துருப்புச் சீட்டை அடித்து வெட்டுவதுபோல, அந்த வல் லரசு, தனது விலக்குரிமை (Weto) என்னும் துருப்பைப் போட்டு, அடித்துத் தீர்மானத்தை வெட்டிவிட முடியும்? இதைப்பற்றி இளைஞர்களிடம் சொன்னால் வியப்பு அடை கிறார்கள். இது ஒரு கேலிக் கூத்தே! இப்படியொரு ஐ.நா. மன்றம் வேண்டியதுதானா? இதற்கு ஐக்கியம்-ஒன்றி யம்-United Nations-என்ற பெயர் பொருந்துமா? இந்த விலக்குரிமை யிருப்பதால், உலக நாடுகள், வல்லரசுகளின் பேரருளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த வல்லடி வழக்கத்தை வல்லரசுகள் தாமாக முன் வந்து கைவிட வேண்டும். இல்லையேல், உலகநாடுகள் ஒவ்வொரு வல்லரசைப் பிடித்துக்கொண்டு பல குழுக்களா கவே இயங்க வேண்டியிருக்கும். இதனால் ஐ.நா. மன்றத் தின் நோக்கம் தோல்வியுறும். இப்போது ஐ.நா. போதிய வெற்றி பெறாததற்குக் காரணம் வல்லரசுகளே என்பதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/269&oldid=544925" இலிருந்து மீள்விக்கப்பட்டது