பக்கம்:உலகு உய்ய.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது. இது மாறவேண்டும்;

உண்மையான உலகச் சமுதாய உணர்வு வேண்டும்.

சமூக ஊக்கம்:

மாந்தன் ஒரு சமூகப் பிராணி (Man is a Social Animal) grañrugs, கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்’ (Aristotle: கி.மு. 384-322) என்பவரது கூற்றாகும். மாந்தன் தனித்து வாழ்வதற்கு உரியவன் அல்லன்; சமூக மாகக் கூடி வாழ வேண்டியவனே யாவான். இந்தியாவில் தமிழ்நாட்டு அறிஞர்கள் இதனை நன்கு உணர்ந்திருந்தனர். "ஊர் ஒட ஒக்க ஒடு’ என்பது பழமொழி. ஒளவையார் என்னும் பெண்பாற்புலவர், ஊர் ஒற்றுமையும் வேண்டும். பல ஊர்கள் சேர்ந்த நாட்டு ஒற்றுமையும் வேண்டும்என்று கூறியுள்ளார்.

'ஊருடன் கூடி வாழ்” (ஆத்திசூடி – 104)

'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்”.

(கொன்றை வேந்தன் - 6)

'தேசத்தோடு ஒத்துவாழ்” (ஆத்திசூடி - 62) 'நாடு ஒப்பன செய்”. (ஆத்திசூடி - 67)

என்பது ஒளவையாரின் அருள் மொழியாகும். சமூகமாகக் கூடி வாழவேண்டும் என்னும் சமூக ஊக்கம் (Instinct of Gregariousness) ஆகிய இயல் பூக்கம் மாந்தர்க்கு உண்டு. அதற்கு ஏற்ற சூழ்நிலையை அமைத்தளிப்பது அறிஞர்கள்-அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்

பாகும். கடமையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/270&oldid=544926" இலிருந்து மீள்விக்கப்பட்டது