பக்கம்:உலகு உய்ய.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

3. சாதி, மதம், மொழி, இனம், நிறம், வட்டாரப் பற்று, நாட்டுப் பற்று, இன்ன பிற அடிக்கடித் தலை காட்டிக் கொண்டேயிருக்கும்; இதனால் மீண்டும் பிரி வினை ஏற்படலாம்.

4. உலகில் ஒரே அரசு உருவானால், செல்வநாடுகள் தம் செல்வத்தைப் பிறநாடுகட்குப் பங்கிடவேண்டிவரும்; அதற்கு அவை ஒப்புவது அரிது. எனவே, எல்லா நாடு களும் உலகக் கூட்டரசில் சேர்வது இயலக் கூடியதன்று.

5. எந்த நாட்டுக்கும் எதிலும் சொந்தப் பொறுப்பு இராது; மற்றவர்கள் பால் ஊற்றுவர்ர்கள்-நாம் ஒருவர் மட்டும் தண்ணிர் ஊற்றினால் தெரியவாபோகிறது என்று எண்ணி எல்லாருமே தண்ணிர் ஊற்றிய கதையாய், எல்லாருமே யாருக்கு வந்த விருந்தோ’ என்றிருக்கக்கூடும்.

6. எந்த நாட்டில் ஆட்சியின் தலைமையகம் இருப் பது? எந்த நாட்டார் தலைவரா யிருப்பது? - என்ற போட்டி மனப்பான்மை உருவாகும்; இதனால் கூட்டரசு வெற்றி பெற முடியாமற் போகலாம்.

இன்ன பிறவற்றைக் காரணமாகக் கூறிக் கூட்டரசுக் கோட்பாட்டைச் சிலர் மறுக்கலாம். ஆனால் இந்தக் குறைபாடுகள், முயன்றால் தீர்க்கக் கூடியவையே, இப் போது, ரஷ்யா, சீனா, அமெரிக்கா (U.S.A.), இந்தியா போன்ற பெரிய நாடுகளில் எவ்வாறு கூட்டாட்சி நடத்தப் பெற்று-எல்லாச் சிக்கல்களும் தீர்க்கப் பெற்று ஒழுங்கு நிலவுகிறதோ, அவ்வாறே, உலகக் கூட்டாட்சியையும் சிக் கல் இன்றி நடத்தி வெற்றி காணலாம். அமெரிக்காவில்

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/274&oldid=544930" இலிருந்து மீள்விக்கப்பட்டது