பக்கம்:உலகு உய்ய.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

(U.S.A.) பல உறுப்பு மாநிலங்கள் (States) இருப்பது போல, இந்தியாவில் பல உறுப்பு மாநிலங்கள் இருப்பது போல, உலகக் கூட்டாட்சியில், ஒவ்வொரு நாடும், சிறிய தாயினும் சரி-பெரியதாயினும் சரியே-ஒர் உறுப்பு மாநில மாக இருக்கும். எனவே, அமெரிக்கா-இந்தியாபோலவே, உலகக் கூட்டாட்சியும் ஒழுங்காக நடைபெறும். எல்லாச் சிக்கல்களும் தீர்க்கப் பெறும்.

இப்போது ஐ.நா. மன்றத்தின் தலைமைச் செயலகம் இருக்கும் நியூயார்க் (U.S.A.) நகரமே, உலகக் கூட்டாட் சியின் தலைநகரமாகவும் இருக்கலாம். ஐ.நா. மன்றம் நியூயார்க்கில் இருக்க மற்ற நாடுகள் ஒத்துக் கொண்டது போலவே இதற்கும் ஒத்துக் கொள்ளலாம். அமெரிக்க (U.S.A.) நாட்டைப் போலவே ரஷ்யாவும் பெரிய வசதி படைத்த நாடாயிருப்பதால், உலக அரசின் இன்றியமை யாத சில அலுவலகங்கள் ரஷ்யாவிலும் இருக்கலாம். *யுனெஸ்கோ'வின் தலைமைச் செயலகம் இப்போது பாரிசில் இருப்பதுபோல், உலக அரசின் பல செயல கங்கள் வேறு சில நாடுகளிலும் இருக்கலாம். உலக அரசின் சட்டமன்றக் கூட்டத்தை அமெரிக்காவிலும் ரஷ் யாவிலுமாக மாறி மாறி நடத்தலாம்; இன்னும் வேறு நாட்டிலும் ஒரு கூட்டத் தொடரை நடத்தலாம். உல கைப் பல மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்ட லத்திலிருந்தும் உரிய தலைவரைத் தேர்ந்தெடுத்து, ஒருவர் போனபின் மற்றொருவர் என்ற சுற்று முறையில் கூட் டாட்சியின் தலைவரை அமர்த்தலாம்.

யுகோஸ்லாவியா நாட்டின் நீண்ட நாள் தலைவரா யிருந்த டிட்டோ (Tito) என்பவர், தமக்குப் பின் ஒன்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/275&oldid=544931" இலிருந்து மீள்விக்கப்பட்டது