பக்கம்:உலகு உய்ய.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”.? (சட்டுவம் அகப்பை)

என்னும் பாடலும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது. உரு வச்சிலை இல்லாத கோயில்கட்குச் சென்று மனத் தால் எண்ணித் தியானித்து உள்ள அமைதி பெறலாம். போலியான பக்தி பெருகினால் போதாது; பண்பு பெருக

வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் புது மதத்துக்கு மாறவேண் டும். மத மாற்றத்தைப் பொறுத்த வரையில், ஒரு காட் டாக இந்தியாவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் முன்பு இந்து மதத்திலிருந்து சமண மதத்துக்கும் புத்த மதத்துக்கும் மாறியவர்கள் பலர்,அப் புதுமதங்களில் பெரிய மோக வெறி' கொண்டிருந்தனர்; பின்னர் மீண்டும் பெரும் பாலார் இந்து மதத்துக்கே மாறி விட் டனர். எனவே மத மாற்றம் என்பது ஒரு சட்டையைக் கழற்றி வேறு சட்டை போட்டுக் கொள்வது போலவே யாகும். எல்லா மதங்களும் நல்லனவற்றையே புகட்டுகின் றன. எனவே எந்த மதத்தில் இருந்தால் என்ன?

இந்தியாவில், பலர், இப்போது, இந்து மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கும் இசுலாம் மதத்திற்கும் மாறியுள்ள னர். மாறுவதற்கு முன் இவர்கள் இந்து மதத்தில் பெரும் பற்றுக் கொண்டிருந்தவர்களே! ஆனால் மதம் மாறிய பிறகு, புதிய மதங்களில் ஆழ்ந்த பற்றும் பிடிப்பும் கொண் டுள்ளனர். எனவே, ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத் துக்கு மாறுவது இயற்கை- அதனால் யாரும் கெட்டுப் போகவில்லை என்பது தெளிவாகிறது எனவே இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/284&oldid=544940" இலிருந்து மீள்விக்கப்பட்டது