பக்கம்:உலகு உய்ய.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

உலக மக்கள் அனைவரும் ஒரு புது மதத்துக்கு மாறினால் வருங் கேடு ஒன்றுமிலது. அந்தப் புது மதத்தின் பெயர் 'ஒருமை’ என்பதாகும் அதாவது, உலக மக்கள் அனை வரும் ஒரே மாதிரியான கடவுள் வழிபாட்டைக் கடைப் பிடிப்பதே ஒருமை மதம் எனப்படும். இந்த ஒருமை மதத் துக்கு அனைவரும் மாறவேண்டும். புது மதத்துக்குப் போவதற்கு முதலில் மனம் ஒவ்வாதுதான். பின்னர்ப் போகப் போகச் சரியாகிவிடும்.

மத வேற்றுமையைக் களைவது போலவே சாதி வேற் றுமையையும் களைந்தெறிய வேண்டும் இதற்குக் கலப்பு மணம் ஒன்றே உரிய வழியாகும். எல்லாச் சாதி-மதம், இனம்-மொழி-நிறம் உடையவர்களும் ஒன்றை விட்டு இன்னொன்றிற்குத் தாவிப் பெண் கொடுத்தல்-வாங்கல் செய்ய வேண்டும். இதற்கு அரசு ஊக்க மளிக்க வேண்டும். சாதி, மதம், இனம்,மொழி,நிறம் ஆகிய மாற்றம் செய்து கொள்பவர்கட்கு அரசு தனிச் சலுகைகள் தந்து ஆதரிக்க வேண்டும்.

உலகப் பொது அரசு முறையில் அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. ஆட்சி செய்யும் ஒரே அமைப்புதான் இருக்கும். ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய தலைவரை அவ்வந் நாடு தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு மண்டலத்துக்கும் உரிய தலைவரை அவ்வம் மண்டலம் தேர்ந்தெடுக்கும். மாவட்ட ஆட்சி போல் ஒவ்வொரு நாட்டின் ஆட்சியும் நடக்கும். மாநில (States) அமைச்சரவை ஆட்சிபோல் ஒவ்வொரு மண்டல ஆட்சியும் நடைபெறும். ஒவ்வொரு நாட்டுக்கும் இப்போது இருப்பது போல் அமைச்சரவையும் ஆட்சி உறுப் பினர்களும் இருப்பர். நாட்டாட்சியினும் பெரிதாக, ஒவ் வொரு மண்டலத்துக்கும் அமைச்சரவையும் ஆட்சி உறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/285&oldid=544941" இலிருந்து மீள்விக்கப்பட்டது