பக்கம்:உலகு உய்ய.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

தகுதி பெற்ற சிலர் தேர்ந்தெடுக்கப் பெற்று நீதி மன்றத் தின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயல்படுவர். இதற்குப்பஞ்சாயத்து'என்றபெயர் உண்டு. பெரும்பாலும் இதில் ஐவர் இருந்து நீதி வழங்குவர். அரசின் தொடர்பு இல்லாமலேயே இந்த நீதி மன்றம் நடக்கலாம். ஊரார்க் குள் எந்த வம்பு வழக்கு இருப்பினும், இந்த நீதி மன்றத் தார் எளிதில்-குறுகிய காலத்தில்-செலவு இன்றியே தீர்த்து விடுவர். வழக்கைச் சேர்ந்தவர்களும் இவர்தம் தீர்ப்புக்குக் கட்டுப்படுவர். ஊர்க் கட்டுப்பாடு’ என்ற முறையில் இது ஒழுங்காக நடைபெறும். இவ்வாறே, இத்தகைய எளியசெலவில்லாத ஊர் நீதி மன்றங்களைப் புதிய உலக அர சும் ஊர்தோறும் அமைக்க ஏற்பாடு செய்யலாம். மற்றும், எல்லா வகையான நீதி மன்றங்களிலும் ஒருவகைச் சீர் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அதன் விவரத்தைப் பட்டறிவு வாயிலாகக் கீழே தருகிறேன்.

நீதிமன்றச் சீர்திருத்தம்:

உரிமை பெற்ற இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு வரை யும், பல மொழிகள் பேசும் பகுதிகள் ஒரு மாநிலமாக (State) இணைந்து அமைந்திருந்தன. 1956 ஆம் ஆண்டில், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது தென்னிந்தியாவின் தெற்குக் கோடியில், மலையாள மொழி பேசப்படும் கேரளப் பகுதியோடு இணைந்திருந்த தும் தமிழ் பேசப்படுவது மாகிய கன்னியாகுமரிப் பகுதி, கேரளத்திலிருந்து பிரிக்கப்பட்டு; கன்னியாகுமரி மாவட் டம்’ என்னும் பெயரில், தமிழ் மொழிபேசப்படும் தமிழ் நாடு’ என்னும் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.இதற்கு அடுத்த ஆண்டாகிய 1957ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் ஒரு நாள் யான் சென்னைக்குச் சென்றிருந்தேன். அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/289&oldid=544945" இலிருந்து மீள்விக்கப்பட்டது