பக்கம்:உலகு உய்ய.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

ஓரிடத்தில், முன்பின் அறியாத கன்னியாகுமரிப் பகுதி யைச் சேர்ந்த இருவரைக் கண்டேன்.அவர்களோடு உரை யாடும் வாய்ப்பும் பெற்றேன். யான் அவர்களை நோக்கி, “மலையாளம் பேசும் கேரள மாநிலத்திலிருந்து பிரிந்துதாய் மொழியாகிய தமிழ்பேசும் தமிழ்நாடு மாநிலத்தோடு நீங் கள் சேர்ந்திருப்பதனால் உங்கட்கு நன்மையேயல்லவா?”. என்று வினவினேன். அவர்களுள் ஒருவர் எனக்கு அளித்த விடையாவது:- "மற்ற நன்மைகள் எல்லாம் அப்புறம் இருக்கட்டும். முதலில் ஒரு தீமையைச் சொல்கிறேன்:” எங்கள் ஊருக்குச் சுமார் ஐம்பது கல் (மைல்) தொலைவில் உள்ளதும் கேரள மாநிலத்தின் தலைநகரும் ஆகிய திரு. வனந்த புரத்தில் உள்ள உயர் நீதி மன்றத்துக்குச் சென்று வழக்கை முடித்துக்கொள்வது முன்பு வழக்கம். இப்போது தமிழ் நாட்டுடன் சேர்ந்து விட்டதால், தமிழ் நாட்டின் தலைநகரும் எங்கள் ஊருக்குச் சுமார் ஐந்நூறு கல் (மைல்) தொலைவில் உள்ளதுமான சென்னை மாநகரில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு யாங்கள் இப்போது வர வேண்டியுள்ளது. இது நன்மையா - தீமையா? என்று அவர் என்னையே வினவுவதன் வாயிலாக விடையளித்தார். இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியதாவது:மக்கள் தம் வம்பு வழக்குகளை உள்ளூரிலேயே அல்லது அண்மையிலுள்ள வேறு ஒர் ஊரிலேயே தீர்த்துக்கொள்ள வாய்ப்பு வசதி இருக்கவேண்டும் என்பதாகும். இதற்காக நீதி மன்ற அமைப்பில் செய்யவேண்டியசீர்திருத்தமாவது:

ஒரே ஊரார்க்குள் உள்ள வம்பு வழக்குகள், ஊர்ப் "பஞ்சாயத்து நீதி மன்றத்தின் வாயிலாகவே தீர்க்கப்பட்டு விடவேண்டும்; இதற்கு வேண்டிய சரியான அமைப்பு இருக்க வேண்டும். ஓர் ஊரார்க்கும் மற்றோர்ஊரார்க்கும்

– 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/290&oldid=544946" இலிருந்து மீள்விக்கப்பட்டது