பக்கம்:உலகு உய்ய.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நிறைவு உரை

முன்னோட்டம்:

இதுகாறும், இந்நூலில் உலகில் பிறந்து விட்ட உயிர் கள் கடினமும் துன்பமும் இன்றி, எளிதாகவும் இன்பமா கவும் வாழ்வதற்கு உரிய வழிமுறைகள் ஆராயப்பட்டுள் ளன. இந்நூலின் முடி மணியாக உலகுக்கு ஒரே அரசு’ இருக்க வேண்டும் என்னும் கோட்பாடு பரிந்துரைக்கப் பெற்றுள்ளது.

ஒரே உலக அரசுக் கோட்பாடு என்னும் இலக்கை நோக்கியே இந்நூலின் பயணம் தொடங்கப் பெற்றுக் குறித்த இலக்கை நெருங்கியும் உள்ளது. இந்தக் கோட் பாடு நிறைவேறுமாயின், மக்களினத்தின் மண்ணுலக வாழ்வு மாண்புள்ள வாழ்வாக மலர்வது உறுதி. 'ஏன் இந்த உலகம்' என்று ஏங்கித் தவிக்கக் கூடிய நிலையில் உள்ள மக்களினம், எளிதாகவும் இன்பமாகவும் வாழ இதனினும் சிறந்த மாற்று வழி எதுவும் இருக்கமுடியாது ஒற்றுமை உயர்வு தரும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

அணிலின் பங்கு:

உலகுக்கு ஒரே அரசு அமைக்க, உலக அறிஞர்கள், உலகத் தலைவர்கள் அன்று தொட்டு இன்று வரை முயன்று வருகின்றனர். இப்போது உலகக் தலைவர்கள் சிலர் இம்முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இம் முயற்சித் தொடரில் எளியேனது பங்கு மிகவும் சிறியதாகும். இந்தியாவில் நிகழ்ந்த இராமாயண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/297&oldid=544953" இலிருந்து மீள்விக்கப்பட்டது