பக்கம்:உலகு உய்ய.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. இராமர் இலங்கைக்குச் செல்வதற்காக, தென்னிந்தியத் தரைப் பகுதிக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் அணை கட்டுவித்தாராம். இராமனின் நட்பு அர சனாகிய சுக்கிரீவனுடைய குரங்குப் படைஞர்கள் கற் களையும் பாறைகளையும் கடலில் போட்டு அணைகட்டிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, சிறிய அணில் ஒன்று சிறிது சிறிதாக மணலைக் கொண்டு வந்து கடல் தண் ணiரில் போட்டு அணைகட்டும் முயற்சியில் தன்னால் இயன்றதைச் செய்ததாம். இராமர் மகிழ்ந்து அந்த அணிலின் முதுகில் தடவிக் கொடுத்தாராம். அந்த அணி லைப் போல, எளியேனும் இம்முயற்சியில் சிறிது பங்கு எடுத்துக்கொண்டேன்-அவ்வளவுதான். இராமர் அணிலின் முதுகில் மகிழ்ச்சியுடன் தடவிக் கொடுத்ததைப்போல, எவரும் என் முதுகில் தடவிக் கொடுக்கா விடினும், இத் தகைய புதிய கருத்துக்கள் சிலவற்றைச் சொல்வதற்காக என்மேல் சினந்து என் முதுகில் அடி கொடுக்காமல் இருந் தால் போதும்.

கண்ணோட்டப் பண்பு:

உலகில் மாபெருஞ் செல்வர்களும் வளமுள்ள நாடு களும் வவ்லரசு நாடுகளும் மற்றவர்.பால்-மற்ற நாடுகளின் மீது அருள் கண்ணோட்டம் செலுத்தினாலேயே ஒரே உலக அரசு அமையும். கண்ணோட்டம் என்னும் மிகப் பெரிய இரக்கப் பண்பு இருந்தால்தான் இந்த உலகமும் நிலைத்து இருக்கும். உலக நடை முறை கண்ணோட் டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், கண் ணோட்டம் இல்லாத மக்கள் உலகுக்கு வீண் சுமையாகவே கருதப்படுவர்; கண்ணோட்டம் உள்ளவர்களே கண்ணாக மதிக்கப்பெறுவர்.உயர் பண்பு உடையவர்களைச் சார்ந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/298&oldid=544954" இலிருந்து மீள்விக்கப்பட்டது