பக்கம்:உலகு உய்ய.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

புகழெனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர், அன்ன மாட்சி அனைய ராகித், தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.” (182)

என்பது அந்தப் புறநானூற்றுப் பாடலாகும். இதன் பொருளாவது:- இறப்பை நீக்கும் இந்திரர் அமிழ்தம் கிடைப்பினும் இனிமையாயிருக்கிறது என்று தாம்மட்டுமே தனித்து உண்ணாமல் பிறர்க்கும் அளித்தே உண்பவர் யாரிடத்தும் சினமோ - வெறுப்போ கொள்ளாதவர், சோம்பல் இல்லாத உழைப்பாளர், அனைவரும் அஞ்சக் கூடிய தீச்செயல்களைத் தாமும் செய்ய அஞ்சுபவர், புக ழான நற்செயல் எனில் உயிரையும் கொடுத்தாயினும் அந்நல்லதையே செய்யக் கூடியவர், பழிவரும் எனில் உலகம் முழுவதையும் ஒருங்கே தரினும் ஏற்றுக்கொள்ளா தவர், துன்பத்தைக் கண்டு சோராதவர், இன்ன பிற நன் மாண்புகளை உடையவராகி, தம் நன்மைக்கு என ஒன் றும் முயலாமல், வலிய உழைப்புடன், பிறரது நன்மைக் காகவே முயன்று பாடுபடும் பெரியார்கள் ஒருசிலராயினும் உள்ளமையால் தான், உலகம் ஒரளவாயினும் ஒழுங்காக இயங்குகிறது’ - என்பது பாடலின் பொருளாகும்.

‘தம் நன்மைக்கு என ஒன்றும் முயலாமல் பிறரது நன்மைக்கு மட்டுமே வலிய உழைப்புடன் முயன்று பாடு படுபவர் உள்ளமையாலேயே உலகம் இயங்குகிறது” என்று பாடல் கூறுகிறது.

'தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே உண்டால் அம்ம இவ்வுலகம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/300&oldid=544956" இலிருந்து மீள்விக்கப்பட்டது