பக்கம்:உலகு உய்ய.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

3) எல்லாருக்கும் உணவு, உடை, உறையுள் முதலிய வசதிகள் போதாமல் வறுமையால் வாடுதல். ஆனால், செல்வர்கட்கு வறுமை இன்மையால் அவர்கள் மிகுதியாகப் பிள்ளைகள் பெறலாமே என்று வினவலாம். உண்டாக்கப் படும் பொருள்கள் எல்லாம் செல்வர்களின் குடும்பங்கட் குச் சரியாகிவிடும்; மற்றவர்கள் எங்கே போவது இதனால் விலைவாசி ஏற்றம் பெறும்; ஏழைகளின் நிலைமை என் னாவது?

4) எல்லாப் பிள்ளைகட்கும் வாழ்க்கைக்குப் போது மான வாய்ப்பு-வசதிகளை இப்போதும் அளிக்க முடியாதுஎதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை வளம் பெறுவதற்கு வேண்டிய வித்தும் இடமுடியாது.

5) பிள்ளைப் பெருக்கத்தைக் குறிப்பிட்ட நாடு சுமக்க முடியாமல் பிற நாடுகளிடம் உதவிக்குக் கெஞ்சவேண்டி வரும். இதனால் மற்றவர்க்கும் தொல்லை கொடுத்ததா கும்.

6) எல்லா நாடுகளிலும் இவ்வாறு மக்கள் தொகை பெருகி விட்டால், இந்த மண்ணுலகுக்குமேல் வேறு உலகங் களில் இடம் தேட வேண்டியதுதான்.

7)'பிள்ளைகள் பெருகப்பெருக, அவர்களுக்காக மிகுந்த செல்வம் சேர்த்து வைக்கத் தீய வழிகளில் செல்லவேண்டி வரலாம். இதனால், பொய் ,புரட்டு, ஏமாற்று, வஞ்சகம், களவு, கள்ள வாணிகம், கள்ளக் கறுப்புப் பணம், கள்ளக் கணக்கு, கையூட்டு (இலஞ்சம்), கலப்படம், பிறர் பொரு ளைக் கவர்தல்-கையாடல், கொலை, கொள்ளை முதலிய கொடிய தீமைகள் ஏற்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/35&oldid=544693" இலிருந்து மீள்விக்கப்பட்டது