பக்கம்:உலகு உய்ய.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

8) நாடும் வீடு போன்றதே. வீட்டில் பிள்ளைகள் பெருகினால் என்ன நிலைமை ஏற்படுமோ-அது போன்ற நிலைமையே நாட்டில் மக்கள் தொகை பெருகினாலும் ஏற்படும். செர்மனியிலும் இத்தாலியிலும் மக்கள் தொகை பெருகிவிட்டதால் முறையே "இட்லரும் முசோலினியும் வேறு நாடுகளைப் பிடிக்க முயன்றதால் இரண்டாவது உலகப் பெரும்போர் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது

9) உலகில் வாழ்க்கையில் பெரும்பகுதி துன்பமாகவே உள்ளது. ஒவ்வொருவரும் தம் வாழ்நாளைக் கடத்தி முடிக்க எவ்வளவோ பாடு படவேண்டியுள்ளது. எனவே, பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளிப் பெருந்துன்பங்கட்கு உள் ளாக்குவது பெரிய பாவம்.

10) பொதுவாகப் பெரும்பாலும் மாந்தர்கள் நேர்மை யற்றவர்கள். எல்லாத் துறைகளிலும் மாந்தர்கள் ஊழல் புரிகின்றனர். நேர்மையான மாந்தன் ஒருவனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகக் கிரேக்க மெய்யறிவாளராகிய சாக் ரடீசு என்பவர், பகலில் விளக்கு எடுத்துக் கொண்டு போனதாகக் கூறப்படும் வரலாறு அறிந்ததே. எனவே, பொல்லாத மக்கட் பிறவிகளைப் புழுக்க வைப்பதேன்?.

இதுகாறும் கூறியவற்றால், வீட்டில் பிள்ளைப் பெருக் கம்-உலகில் மக்கள் பெருக்கம் கூடாது என்னும் கொள்கை தெற்றென விளங்கலாம். கணவன் மனைவியர் இருவரும் தமக்குப் பதிலாகப் பிள்ளைகள் இருவரைப் பெற்று உல குக்குத் தந்து விட்டுப் போனால் போதும். இதனால், வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் அவர்கள் நன்மை செய்தவர்களாவர். இந்த அளவில் சென்றாலேயே, எதிர் காலத்தில் ஏராளமாகப் பெருகிவிடக்கூடிய அச்சம் உள் ளது. எனவே கட்டுப்பாடு மிகவும் இன்றியமையாதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/36&oldid=544694" இலிருந்து மீள்விக்கப்பட்டது