பக்கம்:உலகு உய்ய.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கட்டுப்பாட்டு முயற்சிகள்:

இயல்பூக்கங்களுள் காமப் பசிநோய்-காமவெறி நோய் ஒன்று; அதை வெல்வது கடினம் என்பது முன்னரே கூறப் பட்டுள்ளது. இந்த நிலையில், பிள்ளைப் பேற்றைக் கட் டுப் படுத்துவது எப்படி? இதற்காக உலகநாடுகள்-உலகப் பேரறிஞர்கள், பிறப்புக் கட்டுப்பாடு (Birth control) குடும்பத்திட்டம், (Family planning), குடும்பக்கட்டுப் Lim()' (Family Limitation) (p.53%u QLuff soft எவ்வளவோ முயற்சி எடுத்து வருவது கண்கூடு. இதற்கு உலக மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். இயற்கைக் கட் டுப்பாட்டாலும் செயற்கைக் கட்டுப்பாட்டாலும் இந்த முயற்சியில் வெற்றிகாண முடியும். இவை குறித்துச் சிறிது ஆராயலாம்.

இயற்கைக் கட்டுப்பாடு:

கணவனும் மனைவியும் பிள்ளைகள் இருவரை இடை விட்டுப் பெற்றபின், காம வேட்கையை-காம வெறியை அடக்கி, மனக் கட்டுப்பாட்டுடன் தாம் உடலுறவு கொள் ளாமல் இருப்பதே இயற்கைக் கட்டுப்பாடாகும். இந்த முறையையே அண்ணல் காந்தியடிகள் போன்றோர் பரிந் துரைத்துள்ளனர். காந்தியடிகளின் இந்தக் கருத்தை எழுது பவர்கள், அதைத் தொடர்ந்து, இது, காந்தியடிகள் போன்றோரால் இயலுமே தவிர எல்லாராலும் இயலாது என்னும் ‘ஒப்பாரி' வைக்கத் தவற வில்லை. இயற்கைக் கட்டுப்பாடு ஏன் முடியாது? உலகில் திருமணம் செய்து கொள்ளாத ஆடவர்களும் பெண்டிரும் துறவியர்களும் எவ் வாறு வாழ்கிறார்கள்? இவர்களுள் சிலர்மீது களங்கம் சுமத்தினும் பலர் மீது களங்கம் கற்பிக்க முடியாது. எனவே, எல்லாரும் முயன்று பார்க்கலாம். இயற்கைக் கட்டுப்பாட் டைக் கைக்கொள்ள முடியாதாரின் நிலைமை என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/37&oldid=544695" இலிருந்து மீள்விக்கப்பட்டது