பக்கம்:உலகு உய்ய.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

வெனில், அவர்கள் செயற்கைக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

செயற்கைக் கட்டுப்பாடுகள்:

கணவனும் மனைவியும் உடலுறவு செய்து சொண்டே பிள்ளை பிறக்காதிருக்கும் வழியைப் பின்பற்றுதலே செயற் கைக் கட்டுப்பாடாகும். இந்தக் கட்டுப்பாட்டு முறை பல வாகும். அவற்றுள் சில காண்போம்:

(1) கணவனும் மனைவியும் கூடா நோன்பு கொள்ளும் முறை இயற்கைக் கட்டுப்பாட்டு(Abstinence)முறை ஆகும் இது முடியாதவர்கள், பெண்ணின் வீட்டு விலக்கு(Menses) நாளுக்குப் பின் எத்தனையாவது நாள்களில் கூடினால் கருத்தரிக்கும்-எத்தனையாவது நாள்களில் கூடினால் கருத் தரிக்காது-என்பதையறிந்து, கருத்தரியா நாள்களில் கூட avirih. Qāg (pamp gååa 366) “Safe Period method: அல்லது Rhythm Method என்று வழங்கப்படுகிறது. இந்த முறையில் கருத் தரியா நாள்களைச் சரியாகக் கணித் தறிவது இன்றியமையாததாகும். பூப்பு (விலக்கு) வந்து தலைமுழுகியபின் அடுத்த பன்னிரண்டு நாளும் கருத் தரிக் கும் காலம் ஆதலின், அந்தக் காலத்தில் தலைவன் தலை வியைப் பிரியாது கூடினால் கருத்தரிக்கும் என்பதாகப் பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்”

(தொல்-பொருள்-கற்பியல் - 46)

என்பது தொல்காப்பிய நூற்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/38&oldid=544696" இலிருந்து மீள்விக்கப்பட்டது