பக்கம்:உலகு உய்ய.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

செந்தமிழ்த் தொண்டர் - செயல் மறவர் சிவ. கண்ணப்பா அவர்கள் ஓய்வு பெற்ற தலைமை யாசிரியர், புதுச்சேரி.

"செந்தமிழ்க் குரிசில்” டாக்டர் சுந்தர சண்முகனார் ஒரு பிறவி எழுத்தாளர்; உலகம் வியக்கும் உயர்ந்த கருத்துக்களை வாரி வழங்கும் ஆற்றல் மிக்கவர். அவருடைய கருத்துக்கள் தமிழ் வடிவம் பெற்றிருந்தாலும், உலக அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் சிறப்பு மிக்கவை. "உலகு உய்ய!" என்னும் இந்த நூலில் இதனைக் காணலாம்.

பிறந்த நாட்டால் அவர் ஒரு தமிழர்; வாழும் நிலத்தால் அவர் ஓர் இந்தியர்; உள்ளத்தால் அவர் ஒர் உலகத்தவர். “உலகம் என்பது ஒரே நாடு; ஆங்கிலம் உலக மக்களின் மொழி’ என்ற புதிய கொள்கைக்கு விளக்கம் தரும் நூல் இந்த நூல்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கையை முதலில் வைத்தவர் ஒரு தமிழர். 'தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தன்னி லன்றோ இன்பம்” என்று உலக மக்களைப் பிணைக்க வழி காட்டியவரும் ஒரு தமிழர். “உலகத்தில் ஒரே நாடு ஒரே மொழி - ஒரே கொடி ஒரு காலத்தில் தோன்றும்” என்ற கருத்தை வெளியிட்டவர் ஒரு பிரஞ்சுக்காரர். இம்மூவர் கருத்தையும் விளக்கி உலகுக்கு ஒரு புது நூலைப் படைத்துக் கொடுத்திருக்கிறார் டாக்டர் சுந்தர சண்முக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/4&oldid=508269" இலிருந்து மீள்விக்கப்பட்டது