பக்கம்:உலகு உய்ய.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

வாழ்க்கையைப் போல் ஆகிவிடுகிறது.என்றெல்லாம் கூறப் படுகிறது. எல்லா ஆடவரும் பெண்டிரும் கற்பு நலம் கெட்டு ஒழுக்கக் கேட்டுக்கு உள்ளாவதில்லை. ஒரு சிலரே. அவர்க்கே உரிய தீய பண்பினால் தீய வழியில் செல்வர் கருத்தடை செய்துகொள்ள தாரிடையும் கற்பு கெட்டு ஒழுக்கக் கேடு உண்டாவதைக் காணலாம்.எனவே, எல்லா ரையும் ஒரே தட்டில் வைத்து நிறுத்துப் பார்க்கக் கூடாது.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே போனால் ஒரு காலத்தில் மக்கள் இனமே அழிந்துவிடக் கூடுமே என ஒரு சிலர் அச்சம் தெரிவிக்கலாம். இதனால் ஒன்றும் மக்களினம் அழிந்து விடாது-அழிக்கவும் முடியாது. அங்ங்ணம் அழிந்தாலும், முன்தோன்றியது போல் மீண்டும் தோன்றிப் புழுத்துவிடும்.

எனவே, இன்ன பிற காரணங்களைக் கூறிக் கருத்

தடையை எதிர்ப்பதோ மறுப்பதோ பொருந்தாது. அவ் வாறு எதிர்ப்பது மக்களினத்துக்குச் செய்யும் தீமையே யாகும்.

பரப்பும் முயற்சிகள்

கருத்தடை நூல்களுக்கும்-வெளியீடுகட்கும், கருத் தடைப் பரப்புகைக்கும் (பிரசாரத்துக்கும்) தடை விதித்த நாடுகள் உட்பட, பரப்புநரை ஒறுப்புக்கு உள்ளாக்கிய நாடுகள் உட்பட, உலக நாடுகள் பலவும் இப்போது கருத் தடையை ஆதரிக்கவும் பரப்பவும் தொடங்கி விட்டன. இந்தியாவில் இம் முயற்சி முழு மூச்சாக நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் இம் முயற்சியில் ஈடுபட்டுத் தொடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/46&oldid=544704" இலிருந்து மீள்விக்கப்பட்டது