பக்கம்:உலகு உய்ய.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

கிய பெருமை, ஏ. டாயின்பி, மால்தஸ், திருமதி மேரிகார் மிக்கேல் ஸ்டோப்ஸ் (இங்கிலாந்து), டாக்டர் கார்வே, திருமதி தன்வந்தி ராமராவ் (இந்தியர்) முதலிய உலகப் பேரறிஞர்களைச் சாரும். ஸ்டோப்சும் அவர் கணவரும் முதல் பிரிட்டிஷ் கருத்தடை மருத்துவ மனையை ஏற்படுத் திய பெருமைக்கு உரியவர் ஆவார்கள். மேற்கூறிய அறிஞர் களைப் பின்பற்றிப் பல நாடுகளிலும் பலர் இம் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுகளும் ஒத்துழைத்து வருகின்

றன.

இது சார்பாகப் பல்வேறு முயற்சிகள் செய்து வரலாம். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிலையங்களைப் பல இடங்களிலும் ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்வித்து அரிய வழிமுறைகளை மக்கள் இனத்துக்கு அளிக்கலாம். இதற்கு வேண்டிய மருத்துவ மனைகளைப் பல இடங்களிலும் அமைக்க வேண்டும். சிறு சிறு வெளியீடுகள், தனிநூல்கள் செய்தி இதழ்கள், கூட்டங்கள், மாநாடுகள், வானொலி, தொலைக் காட்சி (டெலிவிஷன்), திரை ஒவியம் (சினிமா), விளம்பரப் பலகைகள் முதலிய துணைக் கருவிகளின் வாயி லாகப் பரப்புதல் (பிரசாரம்) செய்ய வேண்டும்.

தீய முறையில்-பெரிய அளவில் காம வேட்கையைத் தூண்டும் திரை ஓவியங்களையும் இதழ்களையும், நூல்க ளையும் கட்டுப்படுத்த வேண்டும். காம வெறியைத் தூண் டும்திரை ஒவியத்தைப் பார்த்துச் சுவைத்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவனும் மனைவியும் வேலையைத் தொடங்கி விடுவரே! காம உணர்ச்சியை அன்று-காம வெறியைத் தூண்டுகிற திரை ஓவியங்களையும் இதழ்களையும் நூல்க ளையும் நாட்டில் உலாவவிட்டு, இன்னொரு புறம் குடும் பக் கட்டுப்பாட்டைப் பரப்பும் முயற்சி, அறியாமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/47&oldid=544705" இலிருந்து மீள்விக்கப்பட்டது