பக்கம்:உலகு உய்ய.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

மரம் வைத்தவன்:

'மரம் வைத்தவன் தண்ணிர் ஊற்ற மாட்டானா’ என்பது தமிழ் நாட்டில் வழங்கும் ஒரு பழ மொழி. இங் கே 'மரம் என்பது பிள்ளையையும், வைத்தவன்' என் பது கடவுளையும் குறிக்கும். அ.தாவது, கடவுள் செய லால் பிள்ளைகள் பிறக்கின்றனராம்; எனவே கடவுள் பிள் ளைகளைக் காப்பாற்று வாராம். இதை நம்பித் தான் மரங்களை (பிள்ளைகளை) வைத்து விட்டுப் போய் விடுகின்றனர் போலும்! இது தவறான கருத்து. ஒவ்வொரு வரும் தத்தம் சொந்த முயற்சியாலும் மக்கட் சமுதாயத் தின் ஒத்துழைப்பாலுமே தண்ணிரைப் பெற முடியும். எனவே, கடவுளின் பேரால், பொறுப்பு இன்றிப் பிள்ளை களைப் பெற்றுத் தள்ளுபவர்கள், அவர்களை நன்முறை யில் முன்னுக்குக் கொண்டுவர இயலாமையால், அந்தப் பிள்ளைகளின் வசை மொழிகளையும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்! ஈண்டு,

‘அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும்

ஆடையும் ஆதரவாய்க் .

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக்

குறித்த தல்லால்

துள்ளித் திரிகின்ற காலத்தில் என்றன்

துடுக் கடக்கிப் பள்ளிக்கு வைத்திலனே தந்தை ஆகிய

பாதகனே'.

என்னும் பாடலின் உட்பொருளை ஊன்றி நோக்குக.

— 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/50&oldid=544708" இலிருந்து மீள்விக்கப்பட்டது