பக்கம்:உலகு உய்ய.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

எனவே, மக்கள் பொறுப்பு உணர்ந்து, வீட்டில் பிள் ளைப் பேற்றைக் குறைத்தால் வீட்டிலும் நாட்டிலும் வளம் பெருகும். மொத்தத்தில் மக்கள் தொகைக் கட்டுப் பாட்டால் உலகச் சமுதாயம் ஒழுங்கு பெறும். வேண்டாத மக்கள் பிறவியால் ஏற்படும் தொல்லைகளைக் குறைக்க வும், மக்கள் சமுதாயம் உய்யவும், வாழ்லை எளிதாக்கி இன்பமுடையதாகச் செய்யவும் கடைப் பிடிக்க வேண்டிய முயற்சிகளுள், இந்தக் கட்டுப்பாடு, முதன்மையானதும் மிகவும் இன்றியமையாததும் ஆகும்.

இன்பமா - துன்பமா?

மதலையைப் பெறுநாள் துன்பம்,

வளர்த்திடு நாளும் துன்பம், விதலை நோய் அடையில் துன்பம்,

வியன் பருவத்தும் துன்பம், கதமுறு கால தூதர்

கைப்பற்றில் கணக்கில் துன்பம், இதமுறல் எந்நாள் சேயால்

எற்றைக்கும் துன்பம் ஆமால்’’.

பிள்ளைகளால் ஒரு சிறிது இன்பம் இருப்பினும், மேற் கூறிய பாடலோ, பிள்ளைகளால் துன்பமே யன்றி இன்ப மேயில்லை எனச் சிறிதும் கண்ணோட்டம் இன்றிக் கண் டிக்கிறது. எனவே, குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழ்க! அதனால் உலகு உய்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/51&oldid=544709" இலிருந்து மீள்விக்கப்பட்டது