பக்கம்:உலகு உய்ய.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

வெள்ளிக் கிழமையில் நோயாளிகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லினும் . வெள்ளிக் கிழமையில் மருந்து உட் கொள்ளத் தொடங்கினும் - நோய் விரைவில் குணம் அடையாமல் வளர்ந்து நீண்டு கொண்டே போகுமாம். அதனால் பலர் வெள்ளிக் கிழமையில் மருத்துவம் தொடங் குவதில்லை. இதனால், நோயாளி உரிய நேரத்தில் உரிய மருத்துவம் பெற முடியாமல் இறந்து போனதை, உலகத் தில் அன்று - ஊரில் அன்று - எங்கள் குடும்பத்திலேயே யான் பார்த்திருக்கிறேன். கல்வி யறிவில்லாத மூடப் பெண்களைத் திருத்தவே முடியவில்லையே - என்ன செய்வது! ஆண்கள் சிலரும் இத்தகைய அறியாமைக்கு ஆட்பட்டுள்ளனர். "நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை” என்று அதிவீர ராம பாண்டிய மன்னன் வெற்றி வேற்கை என்னும் நூலின் வாயிலாக அளித்துள்ள அறி வுரை இவர்களின் மரமண்டையில் ஏற வில்லையே - என்ன செய்வது! ஒரு நாளிலேயே நல்ல நேரம் கெட்ட நேரம் என்ற பாகுபாடு பார்த்துச் செயல்படுவது இன்னும் வியப்பு! உயிரைப் பொறுத்ததான மருத்துவம் தொடங்குவதற்கே இப்படி யென்றால், வேறு செயல்கள் தொடங்குவதற்குக் கேட்கவா வேண்டும்!

வெளியில் புறப்படுவதிலும் - வெளியூர்ப் பயணம் தொடங்குவதிலும் இதே தொல்லைதான். நல்ல நாளும் நேரமும் கிடைக்கும் வரையும் ஒத்திப் போட்டுக் கொண்டே போக வேண்டியதுதான். ஆனால், பேருந்து (Bus), புகைவண்டி, வானூர்தி, கப்பல் முதலிய ஊர்திகள் எல்லா நாள்களிலும் எல்லா நேரத்திலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கு என்ன வந்து விட்டது? ஆண்டவன் துணை யிருக்கையில் நாளும் கோளும் ஒன்றும் செய்ய முடியாது என்பதாக அருளாளர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/59&oldid=544717" இலிருந்து மீள்விக்கப்பட்டது