பக்கம்:உலகு உய்ய.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

தூண்டி விட்டுள்ள துணிவை மூடர்கள் நம்ப வில்லை - பொருட் படுத்த வில்லை. அருணகிரி நாதர் என்னும் பெரியார் கந்தர் அலங்காரம் என்னும் நூலில்,

“நாள் என் செயும் வினைதான் என் செயும்

எனை நாடி வந்த கோள் என் செயும்’ (38)

(கோள்=கிரகம்) என வினவியுள்ளார். திருஞான சம்பந்தர் என்னும் சிவனடியார், திருமறைக் காடு என்னும் ஊரிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டபோது, நாளும் கோளும் நன்றா யில்லை என்று கூறின வர்க்கு இறைவன் இருக்கையில் நாளும் கோளும் அடியார்கட்கு நல்லனவாகவே இருக்கும் - அஞ்ச வேண்டா - என்ப தாக அவர் பதில் இறுத்துள்ளார். இதனை அவர் பாடிய

“ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி

சனி பாம்பு இரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே”.

சம்பந்தர் தேவாரம்-கோளறு பதிகம்-1.

ந த

என்னும் பாடல் பகுதியால் அறியலாம். எனவே, கட வுளை நம்புபவர்கள் சாவையும் பொருட்படுத்தாமல் நாளும் கோளும் பார்த்துக் கொண்டிருப்பதேன்?

நிமித்தம் பார்த்தல்:

வெளியில் புறப்படும் போது, இன்னின்னார் எதிரில் வரக் கூடாது-இன்னின்ன பறவை-விலங்குகள் எதிரே வரக் கூடாது-இன்னின்ன ஒலிகள் காதில் விழக்கூடாது என்றெல் லாம் நிமித்தம் (சகுனம்) பார்த்துச் செயல்பாடுகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/60&oldid=544718" இலிருந்து மீள்விக்கப்பட்டது