பக்கம்:உலகு உய்ய.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பலர் தள்ளிப் போடுகின்றனர்-சிலர் அறவே நிறுத்தி விடு வதும் உண்டு. இஃதென்ன வம்பு? யாரும்-எதுவும் எதிரே வர முடியாமலும், எந்த ஒலியும் காதில் படமுடியாமலும் தடுக்க முடியுமா? இவர்கள் போவதுபோல் அவர்கள் வரு கிறார்கள்.இதற்கு என்ன செய்வது! வரக் கூடாதவர்கள் எதிரே வந்து விட்டதால் தங்கள் காரியம் கெட்டு விட்ட தாகச் சிலர், எதிரே வந்தவர்களை வைவதுண்டு. இது எவ்வளவு பித்துக்கொளித்தனம்!ஊர்-உலகத்தைக் கட்டுப் படுத்த முடியுமா?

எண் பைத்தியங்கள்:

சில பைத்தியங்கட்குச் சில எண்கள் பிடிப்பதில்லை. ஐரோப்பியருள்ளும் அமெரிக்கருள்ளும் சிற்சிலர்க்கு 13.என் னும் எண் பிடிப்பதில்லையாம். இந்தியர்களுள் சிலருக்கு 8 என்னும் எண் பிடிப்பதில்லை, எட்டு வெட்டிக்கொண்டு போகும்’ என்பது தமிழர் சிலரின் நம்பிக்கை. இவர்கள், எட்டாம் தேதியிலும் எட்டாவது மணி நேரத்திலும் எந் தச் செயலைத் தொடங்கவும் அஞ்சுவர். 8 என்னும் எண் ணுடைய அறையிலோ- வீட்டிலோ வசிக்கவும் அஞ்சுவர். இவையே யன்றி, இன்னும் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு எண் ஆகி (இராசி) வந்த எண்ணாம். இவர்களைப் பைத் தியங்கள் என்னாமல் வேறு என்ன வென்பது? மந்திரம் மாயம்:

மந்திரம்மாயம் என்ற பெயரால் மக்கள் கோட்டை விடுவதும் மிகுதியாயுள்ளது. மணி, மந்திரம், ஒளடதம் என் 'லும் மூவகை மருத்துவ முறை முன்னோர்களால் சொல் லப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான்! ஆனால் கண் டவரெல்லாரும் விண்டது மந்திரம் ஆகாது. நிறைமொழி மாந்தர் கூறும் மறைமொழியே மந்திரமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/61&oldid=544719" இலிருந்து மீள்விக்கப்பட்டது