பக்கம்:உலகு உய்ய.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப"

“மறைமொழி கிளந்த மந்திரத் தான”

என்பன தொல்காப்பியம்-செய்யுளியல்(480,467)நூற்பாக்க ளாகும். திருவள்ளுவரும்

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்”. (28)

எனத் திருக்குறள் நூலில் கூறியுள்ளார். நோய் போக்கு வதில், நிறைமொழி மாந்தர் கூறிய மறைமொழியாகிய -மந்திரமும் ஒருவகை ஈர்ப்பு முறையே (கவர்ச்சி முறையே) யாகும். இது, ஒருவகை உளவியல் மருத்துவ (Psychological Treatment) முறை எனவும் கூறலாம். ஆனால், கீழ்மக்கள் சிலர்'மந்திரவாதி' என்னும் பெயரை வைத்துக் கொண்டு, பாமர மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பது பெரிய அள வில் நடந்துகொண்டுள்ளது. இன்ன மந்திரம் செய்யா விடின் உயிருக்கே ஊறு நேரும் என அவர்கள் மக்களை அச்சுறுத்தித் தம் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின் றனர். இத்தகையோரை மக்கள் நம்பி ஏமாற லாகாது. இவர்களின் பில்லி-சூனிய ஏமாற்று முறையை எடுத்தெறிய வேண்டும்.

உடல் நோய்க்கு மருந்து உட்கொள்ளாமல் மந்தி ரத்தை உருவேற்றுவதால் (செபிப்பதால்) நோய் தீர்ந்து விடுவதில்லை. இயற்கையாகவே எளிதில் குணமாகக்கூடிய நோய்கள், காகம் குந்தியதற்கும் பனம் பழம் விழுந்த தற்கும் சரியாக இருந்தது' என்ற மாதிரியில் ஒரு வேளை குணமாகலாம். எல்லா நோய்களையும் இந்த முறையால் தீர்க்க முடியாது. ‘மந்திரத்தால் மாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/62&oldid=544720" இலிருந்து மீள்விக்கப்பட்டது