பக்கம்:உலகு உய்ய.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

காய் விழாது, என்ற அனுபவ மொழியை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு சிலர், எவ்வகைக் கொடிய நோயாளியை யும் மருந்து தராமல் கோயிலில் கொண்டுபோய்ப் போட்டு வழிபாடு செய்கின்றனர். இதனால் குணமாகாமல் இறந் தவர் பலர். என்ன அறியாமை! என்ன கொடுமை!

திபேத்து நாட்டில், முன்பு, நோய் போக்க மருந்து தராமல் மந்திர உருவேற்றலே நடைபெற்றதாம். இத னால் இறந்தவர் எண்ணிலர். மற்றும், மாட்டுக்குச் சூடு போடுவது போல், பெரும்பாலான நோயாளிகட்குச் சூடு போட்டு வந்தனராம். பெரும்பாலும் பயன் பாழே. இப் போதும், பல நாடுகளில், மக்கள், புதிய அறிவியல் மருத் துவ முறையை நம்பாமல், பழைய மருத்துவ முறையை மட்டுமே நம்பிப் பாழ்பட்டுப் போகின்றனர்.

அம்மை, வாந்தி பேதி போன்ற நோய்கட்கு உரிய மருத்துவம் செய்து கொள்ளாமல், கடவுளையே நம்பிப் பூசனை போட்டுப் போய்ச் சேர்ந்தவர்கள் பலர். அம்மை நோய் தீர அம்மை குத்திக் கொள்வதற்கும், வாந்தி பேதி (காலரா) நோய் போக ஊசி மருந்து ஏற்றிக் கொள்வதற் கும் அஞ்சி ஒடி மறையும் மாமேதைகள் இன்றும் உள்ள னர். மக்களினம், இன்னும் பழைய மூட நம்பிக்கைகட்கு இடந்தராமல், புதிய அறிவியல் முன்னேற்ற முறை களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஊழ்வினை நம்பிக்கை:

'நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் பழைய ஊழ்வினைப்படியே நடக்கும்; நாம் செய்வதற்கு ஒன்றும்

இல்லை எனக்கூறி அயர்ந்து சோர்ந்து அப்படியே அமர்ந்து விடுபவர்கள் பலர். எல்லா மதத்தினரும் பெரும்பாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/63&oldid=544721" இலிருந்து மீள்விக்கப்பட்டது