பக்கம்:உலகு உய்ய.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

ஊழ்வினையை நம்புவதில்லை. இந்து, சமணம், புத்தம் ஆகிய மதத்தினரே பெரும்பாலும் ஊழ்வினையை நம்பு கின்றனர். ஊழ் வினையை நம்பி உட்கார்ந்து கொண் டிருந்தால் உணவு கிடைக்குமா? உழைப்பு இன்றி ஒன்றும் பெற முடியாது. சிலர் பெறுகின்றனரே எனில், பிறர் உழைப்பால் அவர்கள் பெறுகின்றனர்; இஃது இயற் ைக யாய்-தற்செயலாய் அவர்கட்குக் கிடைத்துள்ள வாய்ப்பா கும். அரசு கண்டிப்பான நடைமுறையைப் பின்பற்றின் எவரும் வாளா இருக்கமுடியாது.பிறர் உழைப்பில் பிழைப் பவர்களும் செயல் புரிந்தால், இன்னும் நாட்டில் வளம் பெருகுமே!

செயலாற்றுவதின்றி ஊழ்வினையை நம்பி வாளா இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்! நோய்தீர்ப்பதிலும் ஊழ்வினையை நம்பி வளா இருக்கலாமா? இங்கே எனது சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன் . 1962-ஆம் ஆண்டு மூளைக்கட்டி (Brain Tumour)நோயால் யான் பெரிதும் துன்புற்றேன். ஆறு திங்கள் கால அள வுக்குமேல் தனி மருத்துவரிடமும் புதுச்சேரி மருத்துவ மனையிலும் மருத்துவம் பார்த்துக்கொண்டும் பயனில்லை. உயிருக்கு இறுதிக் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது. சென்னைக்குச் சென்று, மூளை-நரம்பு மருத்துவ வல்லுந ரிடம் மருத்துவம் செய்து கொள்ளுமாறு புதுச்சேரி மருத் துவ மனையினர் அறிவுரை தந்தனர். படுக்கையில் கிடந்த யான், என்னைச் சென்னைக்கு அழைத்துச் செல்லுமாறு என் குடும்பத்தினரிடமும் நெருங்கிய உறவினரிடமும் வேண்டிக் கொண்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: “ஆறு மாதமாக வைத்தியம் பார்த்தோமே-நோய் குண மாகும் கிரகம் இருந்தால் இவ்வளவு நாள் குணமாகியிருக் காதா? சென்னைக்குச் சென்றால் மட்டும் குணமாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/64&oldid=544722" இலிருந்து மீள்விக்கப்பட்டது