பக்கம்:உலகு உய்ய.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கொண்டிருந்தது. அதன் பயனாகவே இந்நூல் முகிழ்த்து மலர்ந்தது.

திருமண அழைப்பிதழில்:

என் மகனது திருமண அழைப்பிதழின் தொடக்கத் தில் 'வாழ்க வையகம்' என்னும் தொடரையும், என் மகளது திருமண அழைப்பிதழின் தொடக்கத்தில் "உலகு உய்க” என்னும் தொடரையும் அமைத்தவன் யான். எனக்கு இந்தக் கோட்பாட்டில் அவ்வளவு பிடிப்பு உள்

ளது.

இவ்வளவு நாள் தமிழ் அறிந்தவர்கட்கு மட்டும் நூல் எழுதினேன். இப்போது உலகினர்க்கு நூல் எழுதியுள்ளேன். இந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அச்சிட்டு உலகம் முழுவதும் பரப்பவேண்டும்என்பது எனது வேணவா. இப்போது முதலில் தமிழ் அறிந் தவர்கள் ஆதரவு அளிக்கும் வண்ணம் பணிவுடன் வேண்டு கிறேன்.

இந்நூலுக்கு மனம் திறந்து மிகவும் சிறந்த அணிந் துரை அருளியுள்ள செந்தமிழ்த் தொண்டர் - செயல் மற வர் உயர்திரு சிவ. கண்ணப்பா அவர்கட்கு எவ்வாறு நன்றி செலுத்துவது என்பது தெரியவில்லை. இந்நூலை நன்முறையில் விரைவில் அச்சிட்டுத் தந்த அண்ணாமலை நகர் கே.பி.டி. அச்சகத்தார்க்கு மிகவும் நன்றி செலுத்து கிறேன்.

இந்த நூலை வெளியிட ஒரளவு பொருளுதவி புரிந் துள்ள புதுச்சேரி மாநில அரசுக்கு நன்றி செலுத்தும் கடப்பாடு உடையேன். -

வணக்கம்.

சுந்தர சண்முகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/7&oldid=544665" இலிருந்து மீள்விக்கப்பட்டது