பக்கம்:உலகு உய்ய.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

ஒருவரை உய்விப்பதே அரிய செயல். உலகம் முழு தும் உய்யச் செய்வது என்பது அரிய பெரிய அடைவு (சாதனை) ஆகும். உலகு உய்வதற்கு உரிய சில வழி முறைகளை இந்த நூல் பல தலைப்பின் கீழ்க் கூறுகிறது. ஒவ்வொரு தலைப்பும் ஒரு கட்டுரை போல் இருக்கும்; ஆனால், இந்நூல், தனித் தனியான பல உதிரிக்கட்டுரை களின் தொகுப்பு அன்று. ஒரு பொருள் நுதலிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

உயர்வு உள்ளல்;

உலகம் உய்ய வேண்டும் என்னும் இலக்கை நோக்கிப் பயணம் செய்யும் புதிய நோக்குடைய இந்நூலில் கூறப் பட்டிருக்கும் வழி துறைகளைப் பின்பற்றினால் வெற்றி கிடைக்குமா - ஒரே உலகம் உருவாகுமா? - என்பதைப் பொறுத்திருந்து காணவேண்டும்.

'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’’ (குறள் - 596) என்பது வள்ளுவம்.

பழையனவற்றுள் வேண்டியவற்றை வைத்துக்கொண்டு வேண்டாதவற்றை விலக்கிவிடலாம் - புதியனவற்றுள்ளும் வேண்டாதவற்றை விலக்கிவிட்டு வேண்டியவற்றை வைத் துக் கொள்ளலாம் - என்னும் நடுநிலைக் கொள்கையை மையமாக வைத்து இந்நூல் படைக்கப்பெற்றுள்ளது.

வெற்று அத்தை - பாட்டி கதைகளைப் படித்துக் கொண்டிருக்கும் நமது நாட்டில், கட்டாயம் படிக்க வேண்டிய இத்தகைய ஆய்வு நூல்கட்கும் ஆதரவு கிடைக்க வேண்டுமே!

தமிழில் இப்படி ஒரு நூல் வெளிவர வேண்டும் என் னும் எண்ணம் நீண்ட நாளாக என் நெஞ்சை உறுத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/6&oldid=544664" இலிருந்து மீள்விக்கப்பட்டது