பக்கம்:உலகு உய்ய.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

பொறிகள் (இயந்திரங்கள்) இல்லை. வாணிகம் செழித்து வளரலாயிற்று.

புதுயுகப் பொருளியல்:

கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து புதுயுகப் Quirójasudi' (Modern Economics) @gm Låsåså my groor லாம். அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு பொறிகள் (இயந் திரங்கள்) தோன்றின. இதனால்'தொழில் புரட்சி (Industrial Revolution) தோன்றிற்று. கைத்தொழில் பொறித் தொழிலாயிற்று-குடிசைத்தொழில் பொறிக் கூடத் தொழி லாயிற்று - தனியாரின் சொந்தத் தொழில் கூலித் தொழி லாயிற்று. முதற்பொருளும் (மூலதனமும்) முதலாளி முறை யும் இன்றியமையாமை பெற்றன. முதல் உள்ளவர்கள் முதலாளிகள். முதல் இவ்லாதவர்கள் கூலிக்காரத் தொழி லாளிகள் என்ற பாகுபாடு ஏற்பட்டது.

இக்காலத்தில் ஊதிய நோக்கும் வாணிக நோக்கும் முதலிடம் பெறலாயின. தேவைக்காக உண்டாக்கம் என்ற நிலைமைக்கு மேலாக, ஊதியத்துக்காக (இலாபத்திற்காக) உண்டாக்கம் என்ற நிலை ஏற்பட்டது. பொருள்களைப் பெருவாரியாக உண்டாக்கி, விளம்பரம் செய்து, விற் பனைக் களம் (Market) தேடலாயினர். சில்லறை விற் பனையாளர், மொத்த விற்பனையாளர், இடைத்தரகர் ஆகியோர் தோன்றினர். வாணிகத்துக்கு உதவியாக வங்கி கள் ஏற்பட்டன. நாணய மாற்று முறையும் (Exchange) நடைமுறைக்கு வந்தது. போக்குவரவு ஊர்தி வசதிகள், தந்தி, தொலை பேசி முதலிய வாய்ப்புகள் ஏற்பட்டதால், தொலைவிலுள்ள நாடுகள் நெருங்கி வரலாயின. வாணிகம் வளமாய் நடைபெறலாயிற்று. உண்டாக்கச் செலவுக்கு ஏற்பப் பொருள்கட்கு விலை வைக்கப்பட்டது. தொழிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/73&oldid=544731" இலிருந்து மீள்விக்கப்பட்டது