பக்கம்:உலகு உய்ய.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

சங்கங்கள், கூட்டுறவுக் கழகங்கள், வாணிகக் கழகங்கள் (Chambers of Commerce) (p.36%uar Gøm or solor.

பொறிகளின் உதவியால் பொருள்கள் பெருகின. உழ வுத் தொழிற்கு முதற்கொண்டு பொறிகளைப் பயன்படுத்தி உண்டாக்கத்தைச் செழிக்கச் செய்து ஒருசிலர் பணம் கொழித்தனர். இவ்வகையில் செல்வமும் வயலும் உள்ள வர்கள் பெரிய பொருளாளிகளாகவும், அவையில்லாதார் ஏழைகளாகவும் மாறினர். இதனால் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டன. இது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, மக்கள் தொகை உண்டாக்கத்துக்குமேல் பெருகத் தொடங்கியதால், பொருள் பற்றாக்குறை, விலைவாசி யேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவை ஏற்பட, ஏழை மக்கள் இன்னலுக்கு உள்ளாயினர். வளமுள்ள இடங்கட்கு எதிராக் வறுமையும் வளர்ந்து வரலாயிற்று. இத்தகைய நிலை தொடர்ந்து கொண்டிருப்பதை இயற்கை ஏற்றுக்கொள்ளாது.

பொருளியல் கூறுகள்:

பொருளியல் கோட்பாட்டில் இன்றியமையாக் கூறுகள் நான்கு உள்ளன. ஒன்று; உண்டாக்கம் (உற்பத்தி-Production)ஆகும்; வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைத் தேவையான அளவுக்குக் குறையாமல் உண்டாக்க வேண் டும்.

இரண்டு:மாற்று(Exchange)ஆகும். வாழ்க்கைகுத்தேவை யான பொருள்கள் யாவும் ஒவ்வோரிடத்திலும் உண்டாக் கப்பட்டு விட வியலாது. ஓரிடத்தில் சில பொருள்களும் வேறிடத்தில் சில பொருள்களும், ஆங்காங்குள்ள சூழ் நிலைக்கேற்ப உண்டாக்கப்படும். ஓரிடத்தார் தம்மிடம் இல்லாத பொருள்களை வேறு இடங்களிலிருந்து வாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/74&oldid=544732" இலிருந்து மீள்விக்கப்பட்டது