பக்கம்:உலகு உய்ய.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

கொள்வதும், ஆங்கில்லாத பொருளகளைத் தாம் அவ்வி டங்கட்கு அனுப்புவதும் மாற்று' எனப்படும். இது முதலில் ஒரு பண்டம் தந்து வேறு பண்டம் வாங்கிக் கொள்ளும் பண்ட மாற்றாக நடைபெற்று வந்தது. பின்னர்ப் பணம் கொடுத்துப் பண்டம் வாங்கும் பணப் பொருளியல் (Money Economy)நடைமுறைக்கு வந்தது. ஆயினும், இன் றும், நாட்டுக்கு நாடு பண்ட மாற்று நடைபெறுவதும் உண்டு. .

மூன்றாவது பகிர்வு'(Distribution)ஆகும். உண்டாக்கப் பட்ட பொருள்களோ-அவற்றால் ஆய ஊதியமோ பலர்க் கும் கிடைக்கும்படி பங்கீடு செய்வதே பகிர்வு ஆகும். முதல் வைத்தோர்க்கும் உழைப்பு தந்தவர்க்கும் இயக்கும் அமைப்புக்கும் (organization) உரிய பங்கு கிடைக்குமாறு பகிர்வு செய்ய வேண்டும்.

நான்காவது'நுகர்வு'(consumption)ஆகும். உண்டாக்கப் பட்ட பொருள் பலராலும் நுகரப்படுவதே(அனுபவிக்கப்படு வதே) நுகர்வு ஆகும். நுகர்வதற்காகவே முதல் வைப்பு, உழைப்பு, அமைப்பு, உண்டாக்கம் முதலிய யாவும் நிகழ் கின்றன. தேவையே கண்டுபிடிப்பின் தாய்’ Necessity is the mother of Invention) GTgörp L1Ll — sólgy G)uonrys) FaöarG) ஒப்பு நோக்கற்பாற்று. எனவே, பொருள்கள், நுகர்வதற்கு ஏற்ற தரம் உடையனவாகவும் பொருத்தமான விலை கொண்டனவாகவும், உரிய நேரத்தில் உரிய அளவு கிடைப் பனவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், நுகர்வு' என்னும் குறிக்கோள் வெற்றி பெற்ற தாகும்.

புரட்சிப் புயல்:

மேற்கூறிய செய்திகளை யெல்லாம் இணைத்து நோக் குங்கால், (சமுதாய) மன்பதை அமைப்பில், சிறுபான்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/75&oldid=544733" இலிருந்து மீள்விக்கப்பட்டது