பக்கம்:உலகு உய்ய.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பண்டைப் பொதுவுடமை:

இக்காலத்தில் அரசியல் சட்டத்தின் வாயிலாகப் பொதுவுடைமைக் கொள்கை புகுத்தப்பட்டுள்ளது - புகுத் தப்படுகிறது. இந்தப் பொதுவுடைமைக் கோட்பாடு உல கத்துக்குப் புதியதன்று; பண்டைக் காலத்திலேயே இதன் சாயல் உலகத்தில் இருந்தது. அப்போது இக்கொள்கை "அறநெறி' என்ற பெயரில் மக்களுக்கு அறிமுகம் செய்யப் பட்டது. அறநூல்களும் மதநூல்களும் இதனைப் பரிந் துரைத்தன. திருவள்ளுவர் தமது திருக்குறள் நூலில் பல கோணங்களில் இதனைப் பரிந்துரைத்துள்ளார்: விருந் தோம்புபவன் வீட்டில் செல்வம் சேருமாம்.தன் இனத்தைக் கரைந்து உண்ணும் காகம்போல், தன் செல்வத்தைப் பலர்க்கும் பகிர்ந்தளித்து உண்ணுபவனுக்குச் செல்வம் நிரம்பச் சேரும். பகுத்து உண்டு பல உயிர்களையும் காக்க வேண்டும். இன்ன பிற வள்ளுவரின் அறவுரை, இச்செய்தி களை,

“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந் தோம்புவான் இல்” (84)

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள’ (527)

'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (322)

என்னும் திருக்குறள் பாக்களால் அறியலாம். இன்னும் திருவள்ளுவர் ஈகை' என்னும் தலைப்பின் கீழ், இல்லாத வர்க்கு உதவ வேண்டியதை வற்புறுத்தியுள்ளார்; ஒப்புரவு அறிதல்' என்னும் தலைப்பின் கீழ், உலகத்துக்கு உதவி உலகத்தோடு ஒத்து வாழ வேண்டும் எனப் பொதுவுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/79&oldid=544737" இலிருந்து மீள்விக்கப்பட்டது