பக்கம்:உலகு உய்ய.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

மைக் கொள்கைக்கு முத்தாரம் சூட்டியுள்ளார். திருவள்ளு வரின் பொருளியல் கோட்பாடொன்று மிகவும் வியப்பளிக்

கிறது. அஃதாவது:

'காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள’ (527)

என்னும் பாடலின் வாயிலாக, பிறர்க்கு உதவி செய்பவ னிடமே செல்வம் உண்டாகும்’ என்று கூறியிருக்கும். கருத்து, புரியாத ஒரு புதிர் போல் தோன்றுகிறது கொடுக்கக் கொடுக்கச் செல்வம் குறையுமே தவிர, மேன் மேலும் உண்டாவதெப்படி? என்ற ஐயம் எழலாம். இதில் ஒரு புரட்சிக் கருத்து இலை மறை காயாய் அடங்கியிருக் கிறது. அஃதாவது:- "பிறர்க்கு உதவுபவனிடமே செல்வம் சேரவும் இருக்கவும், அரசும் சமூகமும் அனுமதிக்க வேண் டும்; ஊர்க்குள் பழுத்த பழமரம் போல் பிறர்க்குப் பயன் படாதவனது செல்வத்தைப் பறிமுதல் பண்ண வேண்டும்’ என்னும் புரட்சிக் கருத்தே அஃது. நாலடியார் என்னும் நூலில் உள்ள

"துகடிர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க” (2)

என்னும் பாடல் பகுதி ஈண்டு எண்ணத்தக்கது. பகடு என் றால் காளை மாடு. பாடல் ஆசிரியர் மாந்தனை நோக்கிக் கேட்கிறார். 'என்னையா! வயலில் காளைகள் நடந்து உழுததால் விளைந்து வந்த உணவுப் பொருளை நீ மட்டும் உண்ண வேண்டுமா? உனக்காகக் காளைகள் உதவி செய் திருக்க, நீ மட்டும் பலர்க்கும் பகுத்தளிக்காது உண்ணுவது முறையாகாது; காளைகளின் உழைப்பு பலர்க்கும் பயன் படவேண்டுமல்லவா? என்று கேட்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/80&oldid=544738" இலிருந்து மீள்விக்கப்பட்டது