பக்கம்:உலகு உய்ய.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

டியுள்ளது. உழைப்பு இருந்தால்தான் தேவைகள் நிறைவு பெறும். எனவே, பொருளியல் கோட்பாட்டின் அடி ஆணி வேர் உழைப்பு’ என்பது புலனாகும்.

மக்கள் அன்று தொட்டு இன்று வரை உழைத்தே வாழ வேண்டியுள்ளவர்களாயுள்ளனர். தோட்டி முதல் தொண் டைமான் வரை-அரசன் முதல் ஆண்டி வரை உழைத்தே வாழ வேண்டியவர்களாயுள்ளனர். பிச்சை எடுப்பது ஆண் டியின் உழைப்பு. ஆளுவது அரசன் உழைப்பு. இந்தக் கருத்தை ஒளவையார் நல்வழிப் பாடல் ஒன்றில் நன்றாக விளக்கியுள்ளார்: வயிற்றின் கொடுமையால் உணவு தேடு வதற்காக, பிறர்க்கு அடிமை வேலை செய்தலும், வீடு தோறும் சென்று இரத்தலும் (யாசித்தலும்), கடல் கடந்து சென்று தொழில் புரிதலும், நடித்தலும், நாடா ளுதலும், பாட்டு இசைத்தலும் ஆகிய பல்வகைச் செயல் புரிந்து உடம்பை வருத்த வேண்டியுள்ளது-என்று கூறியுள்

бтт т:

'சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணிர்க் கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்’ (19)

என்பது அவரது நல்வழிப் பாடல். ஆண்டி இரக்கிறான் என்றால், அரசன் வயிற்றுப் பிழைப்புக்காக நாடாளுகி றான் என நையாண்டி செய்துள்ளார்.

நாலடியார்ப் பாடல் ஆசிரியர், உடம்பை பாழ் உடம்பு என்கிறார்; வயிற்றுப் பசிக்காக அவ்வுடம்பை வருத்துவ தாகச் சொல்கிறார். உடம்பை வருத்துவது என்பது உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/84&oldid=544742" இலிருந்து மீள்விக்கப்பட்டது