பக்கம்:உலகு உய்ய.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

உழைப்பேயாகும். இயற்கையின் விதியும் (சட்டமும்) இஃதே. வயிற்றுப் பிழைப்புக்காக உடல் உழைப்பு தேவைப்படுவது ஒருபுறம் இருக்க, உடல் நலத்துக்காகவும் உடல் உழைப்பு தேவைப்படுகிறது. உழைப்பு இல்லாவிடின் உடம்பு கெட்டழியும். 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது திரு மூலரின் திருமந்திர மொழி. உடல் உழைப்பின்றியே உண்ணக் கூடிய செல்வப் பேறு உடை யவர் சிலர், உடல் நலத்திற்காகவே, சிறு தொலைவாயி னும் நடக்கின்றனர்-சிறிது நேரமாயினும் விளையாடுகின்ற னர். நடந்தும் விளையாடியும் கழிக்கும் நேரத்தை, வீட் டுத் தோட்டத்தில் செடி கொடி வைத்து வளர்த்தல், பொதுப் பணி புரிதல் முதலிய ஆக்க வேலைகளில் கழிக்க லாம். ஒரு கல்லால் இரண்டு மாங்காய் விழுவது போல, இச்செயலால் உடல் நலமும் காக்கப்படுகிறது-ஆக்கமும் உண்டாகிறது. உடம்புக்கு உழைப்பு இயற்கை மருந் தாகும்.

முன்னோர் தேடிய செல்வத்தை வைத்துக் கொண்டு உழைக்காதிருப்பவர்கள், சமூகத்தின் உழைப்பால் உண் டாகும் பொருள்களை நுகர்வதற்கு உரிமையுடையவர் அல்லர். இவர்களின் செல்வம், அரசால் பறிமுதல் பண் ணப்பட வேண்டும். சுப்பிரமணிய பாரதியார் பாடியுள்ள,

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-iணில்

உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்”

என்னும் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

மூவகைத் தேவைகள்:

இந்தச் காலத்தில் தேவைகள் பெருகிவிட்டன. உடல் தேவை, சூழ்நிலைத் தேவை, உள்ளத்தின் தேவை எனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/85&oldid=544743" இலிருந்து மீள்விக்கப்பட்டது