பக்கம்:உலகு உய்ய.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

அன்னவர் ஊதாரித்தனமாய் இருந்து விட்டு இப்போது எங்களை வைவதும் தாக்குவதும் முறையாகுமா? - என்பது முதலாளிகள் தரப்பு வாதமாகும்,

இந்த வாதத்திலும் உண்மை யிருக்கத்தான் செய் கிறது. ஒவ்வோர் ஏழைத் தொழிலாளிக்கும் ஐந்து காணி வீதம் நிலம் இலவசமாகத் தந்தால், அவர்களுள் சிலரே அந்நிலத்தைக் கொண்டு முன்னேறுவர்; மற்ற பெரும் பான்மையினர், சோம்பலாலும் குடியாலும் சூதாலும் இன்ன பிறவற்றாலும் அந்த நிலத்தைத் தொலைத்து விட்டு மீண்டும் ஏழையாகி விடுவர். இது நடவாதிருக்க அர சின் கண்காணிப்பு வேண்டும். இங்கே திருவள்ளுவரின் கருத்துக்கள் நினைவு செய்யத்தக்கன: யாம் ஒன்றும் இல்லாத ஏழைகளாகி விட்டோம் என்று கூறும் சோம் பேறிகளைக்கண்டால் நிலம் என்னும் பெண் எள்ளி நகை யாடுவாள். முயற்சி செல்வம் தரும் - முயலாமை வறுமை தரும். தெய்வத்தால் முடியாததையும் முயற்சியால் முடியச் செய்யலாம். சோராது உழைப்பவர்கள், கெட்ட

ஊழ்வினையையும் வென்று விடலாம். இக்கருத்துக்களை

'இலமென்று அசைஇ யிருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்’ (1040)

'முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்’ (616)

'தெய்வத்தா னாகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்’ (619)

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துளுற்று பவர்’ (620)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/88&oldid=544745" இலிருந்து மீள்விக்கப்பட்டது