பக்கம்:உலகு உய்ய.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

என்னும் குறட் பாக்களால் அறியலாம். எனவே, ஒவ் வொருவரும் கடுமையாய் உழைத்தால்தான் அவரவர் வீடு முன்னேறும் . வீடு முன்னேற நாடு முன்னேறும் - நாட் டின் முன்னேற்றத்திற் கேற்பவே, நாகரிகச் சமூக அமைப்பு உருவாகும்.

தனியார் துறையும் அரசுத்துறையும்:

தனியார் துறையே சிறந்தது என்பது ஒரு சாரார் கொள்கை. அரசுத் துறையே சிறந்தது என்பது மற்றொரு சாராரின் கொள்கை. தனியார் துறையே சிறந்தது என்ப வரின் கொள்கைக்கு உரிய சில சான்றுக ளாவன:

1. தனியார் துறையில், குறிப்பிட்ட முதலாளியின் மேற்பார்வையில் உருவாகும் பொருள்கள் தரமுடையன வாய் இருக்கும். அரசுத்துறையில் யாருக்கும் அவ்வள வாகப் பொறுப்பு இராது - தொழிலாளர்கள் முறையாய்த் தொழில் செய்யார்,

2 தனியார் கடைகளில் பொருள் வாங்கச் சென்றால் பொருள்கள் விற்பனையாக வேண்டுமே - இழப்பு இன்றி ஊதியம் கிடைக்க வேண்டுமே - என்ற அக்கறையுடைய முதலாளியின் மேற்பார்வை யிருப்பதால், செல்பவர்கள் அன்போடு வரவேற்கப் படுகிறார்கள் - அன்போடு நடத்தப் பெறுகிறார்கள். அரசுத் துறையில் இதை எதிர் பார்க்கவியலாது. பொருள் விற்றால் என்ன - விற்கா விட்டால் என்ன? ஊதியம் வந்தால் என்ன - வராவிட் டால் என்ன? என்பதாக, அரசுத் துறை அலுவலர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடும். தனி யார் துறையில், கடையை மூடிய பின் சென்றாலும் கடையைத் திறந்து பொருள்களை விலைக்குத் தருவார் கள், அரசுத்துறை நிறுவனங்களிலோ, நேரமாகி விட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/89&oldid=544746" இலிருந்து மீள்விக்கப்பட்டது