பக்கம்:உலகு உய்ய.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

- நாளைவா எனக் கூறுவார்கள். இது பல இடங்களில் நடக்கிறது.

3. தனியார் பேருந்து (Bus) வண்டிப் பயணத்துக்கும் அரசுப் பேருந்து வண்டிப் பயணத்துக்கும் மேற்கூறியவாறு வேறுபாடு உண்டு.

4. தனியார் கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணாக்கர் களின் தரத்துக்கும் அரசுக் கல்வி நிறுவனங்களில் கற்பவர் களின் தரத்துக்கும் வேறுபாடு உண்டு. முன்னது சிறப்பாக வும் பின்னது அதனினும் மட்டமாகவும் இருப்பதே பெரும் வழக்கமாயுள்ளது.

5. தனியார் மருத்துவமனை - அரசு மருத்துவ மனை, இன்ன பிற நிறுவனங்கள் யாவற்றிலும் தனியார் துறைக் கும் அரசுத் துறைக்கும் மேற்கூறியவாறு வேறுபாடு உண்டு.

இன்ன பிற காரணங்களைக் கூறி, அரசுத் துறையினும் தனியார் துறையில் நிறுவனங்கள் இயங்குவதே சாலச் சிறப்புடைத்து என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். இனி, அரசுத் துறையே சிறந்தது என்பவர் கூறும் சான்றுக

6ттrт6)J6ðт :

1. பெரிய நிறுவனங்களைத் தனியார் இயக்க (Լքւգயாது. தொழிலாளர் புரட்சிகளை அரசு அடக்குவதுபோல் தனியாரால் அடக்க முடியாது. அரசுத் துறைக்குக் கிடைக்கும் அளவு, மூலப் பொருள்கள் தனியார் துறைக்குக் கிடைக்க மாட்டா. இதனால் உண்டாக்கம் (உற்பத்தி) குறையும் - பொருள் பற்றாக் குறை ஏற்படும் - விலை வாசி ஏறும் - எனவே மக்கள் வாங்கும் ஆற்றல் இன்றி

வருந்துவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/90&oldid=544747" இலிருந்து மீள்விக்கப்பட்டது