பக்கம்:உலகு உய்ய.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

விற்பனை வாய்ப்பும் (Market) அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். இவ்வாறு அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் தொழில் ஒழுங்காய் நடப்பதற்கு இந்தத் திட்டத்தில் இடம் இருக்க வேண்டும். தனியார் துறை யும், அரசின் விதிமுறைகட்கு உட்பட்டு அரசின் கண் காணிப்புடன் நேர்மையாக இயங்க வேண்டும்.

எல்லாரும் வேலை செய்ய வேண்டும். முன்னோர் வைத்துப்போன உடைமைகளைக் கொண்டு, வேலை செய் யாமல் உண்டுகொண்டிருப்பவர்களையும் தொழிற்படுத்த வேண்டும்; அவர்கள் மறுப்பார்களாயின் தண்டனை தர வேண்டும்; அவர்களின் உடைமைகளைப் பறித்து, நடந்து கொண்டிருக்கும் தொழில் துறைகளின் முதலீட்டில் சேர்த் துக் கொள்ள வேண்டும்.

எந்தத் துறையில் தொழில் புரியினும், தொழிலாளர்க் குத் தக்க ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும்; இது மட்டும் போதாது; ஆதாயத்தில் தொழிலாளர்க்கும் உரிய பங்கு அளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் செய்யும் வேலைக்கும் கூலியின் அளவுக்கும் ஏற்ப ஆதாயத்தைப் (இலாபத்தை) பங்கீடு செய்ய வேண்டும். உழைப் புக்கு ஏற்ற ஊதியம் - உழைப்புக்கு ஏற்ற ஆதாயப் பங்கு - என்ற முறையை ஏற்படுத்தினால், ஒவ்வொரு வரும் உண்மையாப் உழைப்பர். அரசுத்துறை நிறு வனங்களில் கிடைக்கும் ஆதாயத்தை, அரசு, நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்கும் செலவிட வேண்டியிருப்ப தால், தொழிலாளர்க்குச் சமமான பங்கு தர இயலா விடின், உரிய ஊதியத்துடன், விருப்ப மிகை ஊதியமும்’ (Bonus) அளிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் எல்லாருக்கும் சொத்துரிமை க்க வேண்டும். னால், சொத்துரிமைக்குச் சிற் ரு <鹦 岳 நி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/96&oldid=544753" இலிருந்து மீள்விக்கப்பட்டது