பக்கம்:உலகு உய்ய.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

Qsmá gMavupib (Minimum) GL1G)g áðanavupið (Maximum) அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும். சிற் றெல்லையாக நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வீட்டு மனையாவது இருக்க வேண்டும். பேரெல்லையை வல்லுநர் குழு அமைத்து வரையறுக்க வேண்டும. வீடு, நிலம், நகை, பணம் (ரொக்கம்) முதலிய எல்லாவற்றுக் குமே உச்ச வரம்பு (Ceiling) வரையறுக்கப்பட வேண்டும். இதனால், சமுதாயத்திலுள்ள மேடு பள்ளங்கள் ஓரளவா யினும் சமன் செய்து நிரவப்படலாம். மக்களாட்சிப் பொதுமைக் கொள்கைக்கு (சனநாயக சோஷலிசக் கொள்கைக்கு) இது மிகவும் உகந்ததாகும். சொத்துரிமை விரும்புபவர்கள், பேரெல்லையாகிய உச்ச வரம்பைக் கொண்டு மனநிறைவு அடைய வேண்டும்.

இதுகாறும், பொருளியல் அடிப்படையில் மேலே கூறப் பட்டுள்ள பல கோட்பாடுகளுள், மக்களாட்சிப் பொதுமை’ (சனநாயக சோஷலிசம்) என்னும் கோட்பாடு உலகுக்கு உகந்ததாகும்-என்ற முடிவுக்கு இப்போது வர முடியும்.

செல்வர்க்கு அழகு:

இதனால், மாபெருஞ் செல்வர்கள் தம் உடைமை களுள் பெரும் பகுதியை இழக்க வேண்டி வருமே எனத் தயங்கலாம். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்கு தல்’ என்பது, அதிவீரராம பாண்டியன் என்னும் மன்னன் இயற்றிய 'வெற்றி வேற்கை என்னும் நூலின் பாடலா கும். மிகப் பெரிய கூட்டமாயுள்ள சுற்றத்தார்களை யெல்லாம் தாங்கிக் காப்பாற்றுவதே செல்வர்க்கு இலக் கணமாகும்’- என்பது இதன் பொருள். பெருஞ் செல்வர் கள், நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் தம் சுற்றத்தா ராக மதித்துத் தம் உடைமைகளை வாரி வழங்க வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/97&oldid=544754" இலிருந்து மீள்விக்கப்பட்டது