பக்கம்:உலகு உய்ய.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

டும். இவ்வாறே, மாபெருஞ் செல்வ நாடுகளும், மற்ற ஏழை நாடுகட்குப் பொருள் உதவியும் தொழில் உதவியும் இன்ன பிற உதவிகளும் புரிய வேண்டும். உலக மக்களின முழுதும் ஒரே சுற்றம் அல்லவா - ஒரே குடும்பம் அல்லவா?

'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் பகுதியும்,

'செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்போம் எனினே தப்புந பலவே' (189)

என்னும் நக்கீரரின் புரநானுாற்றுப் பாடல் பகுதியும் ஈண்டு நினைவுக்கு வர வேண்டும். தப்புந பல” என்னும் தொடர், அரசால் பறிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பாய் உணர்த்துகிறது.

பொருளியலில் மக்களின் கடமை:

இது தொடர்பான சில கருத்துகளை மீண்டும் தொகுத்துப் பார்ப்போம்:

1) எவ்வளவு அரும்பாடு பட்டுப் பொருளாதாரத்தை உயர்த்தினாலும், பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாவிடின் ஒரு பயனும் இராது. உலகில் மக்கள் பெருகுவதுபோல் இடம் பெருகுவதில்லை. எப்போதும் உள்ள இடந்தான் எப்போதும் இருக்கும். மக்கைைள மட்டும் பெருக்கினால் வீடும் அதனால் நாடும் நலிய வேண்டியே யிருக்கும். எனவே, எந்த முறை யைப் பின்பற்றியோ, பிள்ளைப் பேற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது, பொருளியல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றி யமையாத கூறாகும்.

- 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/98&oldid=544755" இலிருந்து மீள்விக்கப்பட்டது