பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முயற்சி என்னும் அளவுக்கேனும் இப்பணி விரிவாக வேண்டும். அப்போதே அல்லவை வீழ நல்லவை வாழும். தி. பி. 2019 சுறவம் 24 இன்னணம் (7-2-88) கு. பூங்காவனம் பெங்களூர். அமைப்பாளன், பாவாணர் பதிப்பகம் நன்றி மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் வரைந்த என் அண்ணாமலை நகர் வாழ்க்கை ' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழி 2:6 முதல் 2:12 வரை வெளியானது. அக்கட்டுரைத்தொடரைப் பாவாணர் அவர்களின் 86ஆம் ஆண்டுப் பிறந்த நாளன்று இப் பதிப்பக வழி நூலாக வெளியிடவிரும்பிய போது தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் உடன் இசைவளித்தார்கள், அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். பாவாணர் பதிப்பகத்தார்